Sunday 22 March 2020

குழந்தைகளில் தாக்கம் செலுத்தும் PROBLEM SOLVING


இன்று உலகமே கொரோனா என்ற  பிரச்சினைக்குள் அகப்பட்டு தட்டுத்தடுமாறும் காலம் இது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் எடுக்கப் போகும் சரியான தீர்வே எதிர் காலத்தில் இதன் பாரதூரத்தை தீர்மானிக்கப் போகின்றது. எனவேதான்  பிரச்சினைகளை தீர்க்கும்திறன் என்பது பெரியவர்களும் சரி குழந்தைகளும் சரி அத்தியாவசியமாக வளர்க்க வேண்டிய ஒரு முக்கியமான திறன் ஆகும். 

வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சிகளையும் சுயமாக முகம் கொடுத்து வெற்றி நடை போடும் இன்றைய சிறார்களே, ஆளும் அரசுக்கும் அறிவுரை கூறும் சிறந்த தலைமுறையாக நாளை உருவாக முடியும்.


குழந்தைகளை பொறுத்த வரையில் இந்தத் திறன் எந்த அளவுக்கு விருத்தி அடைந்துள்ளது என்பதனை எதிர்பாராத புது அனுபவத்தை எவ்வாறு அவர்கள் முகம் கொடுக்கின்றார்கள் என்பதனை வைத்துத்தான் புரிந்துக் கொள்ள முடியும்.


ஒரு குழந்தைக்கு  Problem solving விருத்தி அடையவில்லை என்பதற்கான சான்றுகள்.

1.அடிக்கடி குழந்தை பெற்றோர்களிடம்  மற்றவர்களை பற்றி முறையிடுதல்.

அடிக்கடி குழந்தை பெற்றோர்களிடம் தனக்கு ஆசிரியரோ அல்லது மற்ற சகாக்களோ இவ்வாறு செய்கின்றார்கள் அவ்வாறு செய்கின்றார்கள் என்று  முறை இடுகின்றது என்றால். அதாவது ஒரு விடயத்தை எவ்வாறு தீர்ப்பது என்ற அறிவு இன்மையினால் அவர்கள் பெற்றோர்களிடம் முறையிடுகின்றனர். 


2.எப்போதும் பெற்றோர்களை தங்கி வாழுதல்

ஒரு நபருடனான பிரச்சினையை தொடர்பாடல் மூலம் தீர்ப்பதற்கு பதிலாக பெற்றோர்களை தீர்த்து வைக்கும்படி வினவுதல்.

3.பிடிவாதம் பிடித்து எதையும் சாதித்தல்

ஒரு விடயத்தை முறையான விதத்தில் வினவி பெரும் முறை இவர்களுக்கு தெரியாது.
உதாரணமாக  சொக்லட் வேண்டுமென்றால் விழுந்து அழுதல், மயக்கம்போட்டு விழுதல் போல நடித்தல், பொய் சொல்லுதல் போன்றவை மூலம் சாதிக்க நினைத்தல்.

4.புது விடயங்களை முயற்சி செய்யாமல் இருத்தல்

குழந்தை ஒரு விடயத்தை முயற்சிசெய்யும் போது இப்படி செய்தால் சரி வராது என தட்டி  விடும் போது அவர்களுக்கு தோல்விக்கான பயம் (Fear of failure) அதிகமாகி விடும். இதனால்அவர்கள் புது விடயத்தை முயற்சி செய்ய மாட்டார்கள். 



எவ்வாறு குழந்தைகளை Problem solving உள்ள குழந்தைகளாக உருவாக்கலாம்?

1.விளையாட்டின் மூலமாகவும் நிஜ வாழ்க்கை மூலமாகவும் நிறைய அனுபவங்கள ஏற்படுத்தி கொடுத்தல்.

ஒரு பிரச்சினை என்று வரும் போது இவ்வாறு செய்யலாம் அவ்வாறு செய்யலாம் என வெறும் அறிவுரை மட்டும் கூறாமல் விளையாட்டின் மூலமாகவும் நிஜ வாழ்க்கை மூலமாகவும் நிறைய அனுபவங்களை ஏற்படுத்தி கொடுத்தல்.

உதாரணமாக சந்தைக்கு கூட்டிச்சென்று எவ்வாறு பொருட்களை வாங்குதல் அதில்வரும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதனை அவதானிக்க விடுதல்.

எல்லா குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் Problem solving திறன் உருவாகும் என சொல்லி விட முடியாது. அவர்களது அனுபவம், முதிர்ச்சி, புத்திகூர்மை என்பன இவற்றில் தங்கி உள்ளது. 

பெரியவர்களை போல ஒரு பிரச்சினைக்கான தீர்வை உடனே எடுப்பார்கள் என குழந்தைகளிடம் எதிர் பார்க்க முடியாது. வாய்ப்புக்களை அதிகம் உருவாக்கி கொடுக்கும் போது இந்த திறனை குழந்தைகள் படிப்படியாக விருத்தி செய்து கொள்வார்கள்.


2.குழந்தை மற்றவர்களை பற்றி முறையிடும் போது அதற்கான தீர்வை எவ்வாறு எடுக்கலாம் என அவர்களிடமே திருப்பி கேட்டல்.

குழந்தை அடிக்கடி ஆசிரியரை பற்றியோ நண்பர்களை பற்றியோ உங்களிடம் வந்து முறை இடும் போது அதற்கான தீர்வை எவ்வாறு எடுக்கலாம் என அவர்களிடமே திருப்பி கேட்டல். 

இதன் மூலம் தனது பிரச்சினைக்கு தானே தீர்வை  பெற்றுக்  கொள்ள வேண்டும் என்பதனை குழந்தை புரிந்துக் கொள்ளும்.

3.குழந்தை பிடிவாதம் பிடிக்கும் போது  அவ்விடயத்தை செய்து கொடுக்காமல் விடுதல்.

ரு விடயத்தை நாடி குழந்தை பிடிவாதம் பிடிக்கும் போது ஒரு போதும் அவ்விடயத்தை செய்து கொடுத்தல் கூடாது. அழாமல் என்னிடம் வந்து பேசு அடுத்து என்ன செய்யலாம் என பார்ப்போம் என உறுதியான குரலில் கூறுதல்.

4.கல்வி விடயத்தில் குழந்தை பிரச்சினையை எதிர்கொண்டால் அந்த விடயத்தை இலகுவாக்கி விடுதல்

கணிதத்தில் குழந்தை கஷ்டப்பட்டால் அதன் அடிப்படையை விளங்க வழி செய்தல்.


www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 22nd of March 2020.

Sunday 15 March 2020

COVID-19 குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?


உலகை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் COVID-19ஆல் எமக்கு ஏற்பட்ட உடலியல் தாக்கங்களைவிட மனரீதியான தாக்கங்களே அதிகமாக உள்ளது. இதனால் எமது கண்காணிப்பில் உள்ள குழந்தைகளும் மறைமுகமாக பாதிக்கப்படுவதை யாராலும் மறுக்க முடியாது.




COVID-19 போராட நாமும் தயார் என்பதற்கு நம்பிக்கையூட்டும் தகவல்கள்

  • மருத்துவ வளர்ச்சியின் உச்ச காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அதற்கான சான்றுகள் 

  1. நோய்க்கு  காரணமான வைரஸ் மற்றும் அதற்கான மரபணுத்தொடரும் வெகு விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது.
  2. நோய் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகளும் (Testing) விரைவில் உருவாக்கப்பட்டன.
  3. நோய்க்கான மருந்து மற்றும் தடுப்பு மருந்துகள் (Vaccine) கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் முன்னேற்றப்பாதையில் சென்றுக்கொண்டு உள்ளன.

  • China Whuhan மாநிலத்தில்தோற்றுவிக்கப்பட்ட இந்த நோயானது பாரிய அழிவை அந்நாட்டில் ஏற்படுத்தினாலும் அரசின் உடனடி நடவடிக்கைகளின் காரணமாக நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நாளுக்குநாள் நோயினால் பாதிக்கப்பட்டோரின் தொகை குறைந்து கொண்டு செல்கின்றது
  • குழந்தைகள் தொற்றுக்குள்ளானது இதுவரை <3 சதவீதமாகவே உள்ளது அவர்களுக்கு ஏற்பட்ட வீரியத்தன்மையும் குறைவே.
  • WHOஆல் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு முறைகள் இலகுவில் எல்லோராலும் பின்பற்றக்கூடிய ஒன்றாக உள்ளது
  1.  அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளுதல். 
  2. இருமல் தும்மலின்  போது முறையான பாதுகாப்பு முறைகளை பேணுதல். 
  3. தரைகளை சுத்தமாக வைத்திருத்தல். 

COVID-19 பற்றி குழந்தைகளுக்கு எவ்வாறு எடுத்துக்கூறலாம்?

  • வயதிற்கு ஏற்ற வகையில் நோய் பற்றிய சரியான தகவல்களை குழந்தைகளுக்கு வழங்கல்.

 Ex :- ''உலகில்  தடுமல் காய்ச்சல் போன்ற ஒரு வகையான வைரல் நோய்  பரவிக்கொண்டு உள்ளது. இந்த நோய்க்கு ஆளாகிய எத்தனையோ பேர் முறையான சிகிச்சை பெற்று பூரணமாக குணமாகியுள்ளனர். இந்த நோய் எமக்கு ஏற்பட்டால் எமக்கு உதவுவதற்கு வைத்தியர்களும் தாதியர்களும் தயாராக உள்ளனர்.''

  • இப்போது நாம் இந்த நோயிலிருந்து பாதுகாப்பாகவே உள்ளோம். அச்சப்பட தேவை இல்லை எனக் கூறுதல்.

  • சரியான தடுப்பு முறைகளை பயன்படுத்துவோமாயின் இந்நோயிலிருந்து எம்மை முற்றாக பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தல்.

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 15th of March 2020.

Wednesday 11 March 2020

வயதிற்கு ஏற்றவகையில் விளையாட்டை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது எவ்வாறு?


2-7 வயது

இந்த வயது குழந்தைகளுக்கு Rules பின்பற்ற தெரியாது. தோல்வி வெற்றி என்ன என்பதனை அறியமாட்டார்கள். 
குறிப்பாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் Luck & gambling சம்பந்தப்பட்ட விளையாட்டுக்களை புரிந்துகொள்ளமாட்டார்கள். உதாரணமாக Ludo & Snakes and ladder போன்ற விளையாட்டுக்களில் தோல்வியுறும் போது அது அதிஷ்டத்தால் ஏற்பட்டது என்பதனை புரிந்துகொள்ள மாட்டார்கள். இது நியாயமற்ற செயல் என்றே உணர்வார்கள்.

குழந்தைகள் எப்போதும் பெற்றோர்களை அவர்களின் சுற்றத்தார்களை  பிழை செய்யமாட்டார்கள் என்றே எண்ணுகின்றார்கள். இவ்வாறான விளையாட்டுக்களில் பெற்றோர்கள் அவர்களுடன் இணைந்து விளையாடும் போது பெற்றோர்கள் தன்னை ஏமாற்றுகின்றார்கள் என்ற யூகத்தை தோற்றுவிக்கும். 

கற்பனை விளையாட்டுக்கள் அவர்களிடம் நிறைய இருக்கும். எந்த அனுபவத்தை நிஜத்தில் பெறுகிறார்களோ அதனை விளையாட்டாக  மாற்றுவார்கள். உதாரணமாக குழந்தை காய்ச்சல் காரணமாக வைத்தியசாலை சென்றுவந்திருந்தால் டாக்டர் டாக்டர் விளையாட்டு விளையாடும். கிட்டத்தட்ட ஒரு கிழமை வரை இந்த விளையாட்டு நீடிக்கும். இதன் மூலம் உலகத்தில் பல விடயங்கள் நடைபெறுகின்றது எல்லாம் சாத்தியமானது என்பதனை புரிந்துகொள்கின்றனர்


8-12 வயது

இவர்களால் Rules பின்பற்ற முடியும். தனக்கு ஒரு வாய்ப்பு வரும். பின்னர் அந்த வாய்ப்பு இன்னொருவருக்கு செல்லும்.  இதன் மூலம் ஒரு சமயம் நாம் தோற்போம் இன்னொரு சமயம் வெல்லுவோம். தோற்கும் போது இன்னொரு வாய்ப்பை பெற்று அதனை வெற்றியாக மாற்ற முடியும் என்ற வாழ்க்கையின் முக்கியமான உண்மையை குழந்தைகள் புரிந்துகொள்கின்றனர். 

ஒரு விளையாட்டு சலிப்பு தட்டும் போது அதன் விதிமுறைகளை மாற்றி இன்னொரு விளையாட்டாக மாற்றி விளையாடுவர். இதன் மூலம் புதிய அனுபவங்களினூடாக கற்றுக்கொள்ள மூளை ஆயத்தமாகின்றது என அர்த்தமாகும்.



13 வயதிற்கு மேற்பட்டவர்கள்

இந்த வயது குழந்தைகளினது விளையாட்டு சமூகம் சார்ந்த விளையாட்டாக இருக்கும். இவர்கள் விளையாட்டுப் பொருட்கள் பயன்படுத்துவது குறைவு. சின்ன சின்ன குழுக்களாக இணைந்து பேச்சு விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள். உதாரணமாக உலக பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு அதனை தீர்ப்பதற்கு முனைதல், மரம் நட்டுதல், அநீதிக்கு எதிராக போராடல் போன்றவை. அவர்களது கருத்துக்கள் சரியாக இருந்தால் அவர்களுக்கு உதவுவதில் தப்பில்லை.



www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 11th of March 2020

Saturday 7 March 2020

உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட மறுக்கின்றதா?


கூட்டுக்குடும்பங்கள் அரிதாக்கிக் கொண்டு  செல்வதும் பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதானாலும் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பை இன்றைய நவீன சிறுவர்கள் இழந்து விடுகின்றனர்.



குழந்தை சேர்ந்து விளையாட வேண்டும் என்றால் முதலில் சேர்ந்து விளையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். இரண்டாவது விளையாட்டுக்கான நான்கு படிமுறைகளையும் குழந்தை தாண்டிச்செல்ல வேண்டும்.

விளையாட்டுக்கான நான்கு படிமுறைகள் என்ன?


Solitary Play

ஒரு குழந்தை புதிய நண்பர்களுடன் சேரும்போது  முதலில் தனிமையிலேயே தனக்கு பிடித்தமான பொருட்களுடன் விளையாடுவார்கள். இது மூன்று மாதங்கள் வரை நீடிக்கலாம். சரியான வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டால் ஆறு மாதங்கள் வரை நீடிக்க முடியும்.



Parallel Play

 இங்கு குழந்தைகள் ஒன்றாக உட்கார்ந்து தனியாக தங்களுடைய விளையாட்டை விளையாடுவார்கள். வெளியே இருந்து பார்க்கும் போது ஒன்றாக விளையாடுவது போல தோன்றும். ஆனால் நிஜம் அதுவல்ல. இது சில வாரம் தொடக்கம் ஒரு மாதம் வரை நீடிக்கலாம்.



Associated Play 

குழந்தைகளுக்கு இடையில் பொருட்கள் செயற்பாடுகள் பரிமாற்றம் நடைபெறும். இங்கும் சேர்ந்து விளையாட மாட்டார்கள். தனிமையில்தான் இருப்பார்கள்.



Co operative Play

இறுதியில் நிஜ விளையாட்டுக்குள் செல்வார்கள். தான் வாய்ப்பை பெற்றுக்கொள்ளல் மற்றவர்களுக்கு கொடுத்தல். விளையாட்டில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அவை பின்பற்றப் படுதல் எல்லாம் நடைபெறும்.


சிறுவயதில்  தமது உறவுகளில் இந்த படிகளை தாண்டி விளையாட்டை முழுமையாக அனுபவிக்கும் குழந்தைகளே எதிர்காலத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் வேலைத்தளத்தில் சிறந்த உறவுகளை பேணுவத்துடன் பிரச்சினைகள் என்று வரும்போது அவற்றை சிறந்த முறையில் கையாளவும் ஆற்றல் பெறுகின்றனர்.

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 7th of March 2020.

Tuesday 3 March 2020

விளையாட்டு ஏன் குழந்தைகளுக்கு முக்கியமானது?


இயற்கையாக குழந்தைகளின் மூளையை விருத்தி செய்யும் சிறந்த சாதனம் விளையாட்டே ஆகும். தன்னுடைய மூளைக்கு  எது தேவையோ அதனை குழந்தைகள் விளையாட்டின் மூலமே கற்றுக் கொள்கின்றது.

 இதனால்தான் விஞ்ஞானி  ஐன்ஸ்ட்டின் கூறினார் ''விளையாட்டுத்தான் இருப்பதிலேயே சிறந்த ஆராய்ச்சி'' என்று.


சில காலங்களுக்கு முன்னால் அமெரிக்க நாசா நிறுவனத்தின் உப கம்பனி ஒன்று, தனது மூத்த பொறியியலாளர்கள் கணிசமான தொகையினர் ஒய்வு பெற இளம் பொறியியலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டி இருந்தது. அதன் பிறகு  உள்ள மூன்று வருடங்களில் எந்த ஒரு கண்டுபிடிப்புகளும் நடைபெறவில்லை. புது ரொக்கெட்டுக்கள் அனுப்பப்படவும் இல்லை. இதற்கான காரணத்தை ஆராய ஒரு உளவியலாளர் வயதான மற்றும் இளமையான பொறியியலாளர்களின் சிறுவயது விளையாட்டு அனுபவங்களை திரட்டி ஒரு ஆராய்ச்சி செய்தார். அந்த ஆராய்ச்சியிலிருந்து அவர் வழங்கிய முடிவு என்னவென்றால்

மூத்த பொறியியலாளர்கள் மண் விளையாடியவர்கள். மரம் ஏறியவர்கள். சின்ன சின்ன பொருட்களை வைத்து விளையாட்டு பொருட்கள் செய்தவர்கள். ஆனால்  இளம் பொறியியலாளர்கள் அவ்வாறல்ல. அவர்கள் புத்தகங்கள்  மற்றும் online மூலம் கற்றுப்  பழகியவர்கள். பொருட்களை வைத்து வித்தியாசமாக உருவாக்கியவர்கள் கிடையாது. 

எனவே  மூளை விருத்தியாக வேண்டும் என்றால்  நாம் கைகளை பயன்படுத்த வேண்டும். கைகள் மூலம் வேலை செய்யும் போது அதனை மூளை நன்றாக புரிந்துக்கொள்கின்றது.


விளையாட்டு என்பது
  1. உடல் ரீதியான ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.
  2. சுயசிந்தனையை வளர்த்தும்
  3. மற்றவர்களுக்கு இணங்கி நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும்.
  4. தோல்வியையும் வெற்றியையும் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தும்.
  5. நரம்பெண்களை தூண்டிவிட்டு மூளை விருத்தியில் உதவும்

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 3rd of March 2020.