Sunday 22 March 2020

குழந்தைகளில் தாக்கம் செலுத்தும் PROBLEM SOLVING


இன்று உலகமே கொரோனா என்ற  பிரச்சினைக்குள் அகப்பட்டு தட்டுத்தடுமாறும் காலம் இது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் எடுக்கப் போகும் சரியான தீர்வே எதிர் காலத்தில் இதன் பாரதூரத்தை தீர்மானிக்கப் போகின்றது. எனவேதான்  பிரச்சினைகளை தீர்க்கும்திறன் என்பது பெரியவர்களும் சரி குழந்தைகளும் சரி அத்தியாவசியமாக வளர்க்க வேண்டிய ஒரு முக்கியமான திறன் ஆகும். 

வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சிகளையும் சுயமாக முகம் கொடுத்து வெற்றி நடை போடும் இன்றைய சிறார்களே, ஆளும் அரசுக்கும் அறிவுரை கூறும் சிறந்த தலைமுறையாக நாளை உருவாக முடியும்.


குழந்தைகளை பொறுத்த வரையில் இந்தத் திறன் எந்த அளவுக்கு விருத்தி அடைந்துள்ளது என்பதனை எதிர்பாராத புது அனுபவத்தை எவ்வாறு அவர்கள் முகம் கொடுக்கின்றார்கள் என்பதனை வைத்துத்தான் புரிந்துக் கொள்ள முடியும்.


ஒரு குழந்தைக்கு  Problem solving விருத்தி அடையவில்லை என்பதற்கான சான்றுகள்.

1.அடிக்கடி குழந்தை பெற்றோர்களிடம்  மற்றவர்களை பற்றி முறையிடுதல்.

அடிக்கடி குழந்தை பெற்றோர்களிடம் தனக்கு ஆசிரியரோ அல்லது மற்ற சகாக்களோ இவ்வாறு செய்கின்றார்கள் அவ்வாறு செய்கின்றார்கள் என்று  முறை இடுகின்றது என்றால். அதாவது ஒரு விடயத்தை எவ்வாறு தீர்ப்பது என்ற அறிவு இன்மையினால் அவர்கள் பெற்றோர்களிடம் முறையிடுகின்றனர். 


2.எப்போதும் பெற்றோர்களை தங்கி வாழுதல்

ஒரு நபருடனான பிரச்சினையை தொடர்பாடல் மூலம் தீர்ப்பதற்கு பதிலாக பெற்றோர்களை தீர்த்து வைக்கும்படி வினவுதல்.

3.பிடிவாதம் பிடித்து எதையும் சாதித்தல்

ஒரு விடயத்தை முறையான விதத்தில் வினவி பெரும் முறை இவர்களுக்கு தெரியாது.
உதாரணமாக  சொக்லட் வேண்டுமென்றால் விழுந்து அழுதல், மயக்கம்போட்டு விழுதல் போல நடித்தல், பொய் சொல்லுதல் போன்றவை மூலம் சாதிக்க நினைத்தல்.

4.புது விடயங்களை முயற்சி செய்யாமல் இருத்தல்

குழந்தை ஒரு விடயத்தை முயற்சிசெய்யும் போது இப்படி செய்தால் சரி வராது என தட்டி  விடும் போது அவர்களுக்கு தோல்விக்கான பயம் (Fear of failure) அதிகமாகி விடும். இதனால்அவர்கள் புது விடயத்தை முயற்சி செய்ய மாட்டார்கள். 



எவ்வாறு குழந்தைகளை Problem solving உள்ள குழந்தைகளாக உருவாக்கலாம்?

1.விளையாட்டின் மூலமாகவும் நிஜ வாழ்க்கை மூலமாகவும் நிறைய அனுபவங்கள ஏற்படுத்தி கொடுத்தல்.

ஒரு பிரச்சினை என்று வரும் போது இவ்வாறு செய்யலாம் அவ்வாறு செய்யலாம் என வெறும் அறிவுரை மட்டும் கூறாமல் விளையாட்டின் மூலமாகவும் நிஜ வாழ்க்கை மூலமாகவும் நிறைய அனுபவங்களை ஏற்படுத்தி கொடுத்தல்.

உதாரணமாக சந்தைக்கு கூட்டிச்சென்று எவ்வாறு பொருட்களை வாங்குதல் அதில்வரும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதனை அவதானிக்க விடுதல்.

எல்லா குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் Problem solving திறன் உருவாகும் என சொல்லி விட முடியாது. அவர்களது அனுபவம், முதிர்ச்சி, புத்திகூர்மை என்பன இவற்றில் தங்கி உள்ளது. 

பெரியவர்களை போல ஒரு பிரச்சினைக்கான தீர்வை உடனே எடுப்பார்கள் என குழந்தைகளிடம் எதிர் பார்க்க முடியாது. வாய்ப்புக்களை அதிகம் உருவாக்கி கொடுக்கும் போது இந்த திறனை குழந்தைகள் படிப்படியாக விருத்தி செய்து கொள்வார்கள்.


2.குழந்தை மற்றவர்களை பற்றி முறையிடும் போது அதற்கான தீர்வை எவ்வாறு எடுக்கலாம் என அவர்களிடமே திருப்பி கேட்டல்.

குழந்தை அடிக்கடி ஆசிரியரை பற்றியோ நண்பர்களை பற்றியோ உங்களிடம் வந்து முறை இடும் போது அதற்கான தீர்வை எவ்வாறு எடுக்கலாம் என அவர்களிடமே திருப்பி கேட்டல். 

இதன் மூலம் தனது பிரச்சினைக்கு தானே தீர்வை  பெற்றுக்  கொள்ள வேண்டும் என்பதனை குழந்தை புரிந்துக் கொள்ளும்.

3.குழந்தை பிடிவாதம் பிடிக்கும் போது  அவ்விடயத்தை செய்து கொடுக்காமல் விடுதல்.

ரு விடயத்தை நாடி குழந்தை பிடிவாதம் பிடிக்கும் போது ஒரு போதும் அவ்விடயத்தை செய்து கொடுத்தல் கூடாது. அழாமல் என்னிடம் வந்து பேசு அடுத்து என்ன செய்யலாம் என பார்ப்போம் என உறுதியான குரலில் கூறுதல்.

4.கல்வி விடயத்தில் குழந்தை பிரச்சினையை எதிர்கொண்டால் அந்த விடயத்தை இலகுவாக்கி விடுதல்

கணிதத்தில் குழந்தை கஷ்டப்பட்டால் அதன் அடிப்படையை விளங்க வழி செய்தல்.


www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 22nd of March 2020.

No comments:

Post a Comment