Tuesday 28 April 2020

குழந்தைகளுக்கு தினசரி வேலைகளை அறிமுகப்படுத்தல்


குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வீட்டு வேலைகளை அவர்களின் வயதிற்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தல் என்பது மனரீதியான பல நன்மைகளை ஏற்படுத்துகின்றது என உளவியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால்தான் ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் பாடசாலைகளில் தமது வகுப்பறையை ஏன் மலசலக் கூடங்களை கூட தாமே சுத்தப்படுத்த கற்றுக்கொடுக்கப்படுகின்றது. இதன்மூலம் பல நன்மைகளை குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர்.


குழந்தைகளுக்கு தினசரி வேலைகளை பழக்குவதனால் ஏற்படும் நன்மைகள்


  • வீட்டிலுள்ள பொருட்கள் என்னுடையது இதனை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
  • கூர்ந்து கவனிக்கும் திறன்  விருத்தி அடைகின்றது. 

உதாரணமாக தூசு தட்டும் போது முதலில் புத்தகங்களை எடுத்து வைத்தல் பின் தூசி தட்டுதல் பின்பொருட்களை இருந்த இடத்தில் எடுத்து வைத்தல் போன்று தொடராக ஞாபகப்படுத்தி விடயங்களை செய்ய பழகுகின்றனர்.இது பிற்காலத்தில் கற்றல் நடவடிக்கைகளிலும் ஒரு தொடராகவுடன் கற்றலை  மேற்கொள்ள ஏதுவாகின்றது.
  • இரண்டு கைகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் போது மூளையின் இரண்டு பகுதிகளுக்கும் உண்டான திறமைகள் விருத்தி அடைய ஏதுவாகின்றது.


வயதிற்கு ஏற்ற வகையில் குழந்தைகளுக்கு வேலைகளை வழங்கும் போதே அது வினைத்திறனாக அமையும். குழந்தை உளவியலாளர் ஒருவர்  வயதிற்கு ஏற்ற வகையில் எவ்வாறு வழங்கலாம் என பின்வருமாறு விபரிக்கின்றார்.

1- 3 YEARS

ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பொறுத்த வரையில் சின்ன சின்ன வேலைகளை  ஏவுவதால் மாத்திரம் அவர்கள் குறிப்பிட்ட வேலையை செய்துவிடமாட்டார்கள்.  அவர்களுடன் நாமும் இணைந்து ஒரு விளையாட்டாக செயற்படும்போது உற்சாகமாக செயற்படுவார்கள்.

  • சாப்பிட்ட பிறகு குழந்தையின் கைகளில் Plateயை வழங்கி 'வாங்க நாம் kitchenயில்  வைப்போம்' எனக்கூறல் அவர்கள் அதனை செய்யும்போது good என கைதட்டல்.
  • கழுவிய பாத்திரங்களை குழந்தைகளின் உதவியுடன் அடுக்குதல். 
சமயலறை பாத்திரங்களின் ஒலிகளை உணர்ந்துகொள்வதன் மூலம் மொழி வளர்ச்சிற்கு உதவுகின்றது.
  • உறவினர்களின் உடைகளை அவர்களின் உதவியுடன் அப்பாவின் அம்மாவின் தம்பியினது என கூறி கூறி தரம்பிரித்து அடுக்குதல். இதன் போது குழந்தை ஒரு பொருள் எங்கு பொருந்தும் (Categorization) என்பதனை புரிந்து கொள்வதோடு இது பிற்காலத்தில் எழுத்துக்களை இலக்கங்களைமற்றும்  நிறங்களை பிரித்தறிவதற்கான அடிப்படையை வழங்குகின்றது.அப்பாவின் உடைகள் பெரியது தம்பியின் உடைகள் சிறியது போன்ற கணிதத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளும்.

2-2 1/2 வயது 
  • விளையாடி முடித்த பிறகு விளையாட்டுப் பொருட்களை ஒரு பெட்டியில் எடுத்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தல்.நாமும் சேர்ந்து ஒரு விளையாட்டாக செய்து காட்டல்.இதன் மூலம் எடுத்த பொருட்களை இருந்த இடத்தில் வைக்க வேண்டுமென்ற தகவல் மூளையில் பதியும். பாதணிகளை பாவித்த உடைகளை உரிய இடத்தில் போட வைத்தல்.

3-5 YEARS 

இது குழந்தைகள் பாடசாலை போன்ற வெளி இடங்களுக்கு சென்று வரும் பருவமாகும்பாதணிகள் புத்தகப்பை போன்றவற்றை பாடசாலை விட்டு வந்த உடன் உரிய இடத்தில் வைக்க சொல்லிக்கொடுத்தல்.

4 வயது - socks கைக்குட்டை போன்ற சிறிய உடைகளை கழுவுவதற்கு வாய்ப்பளிக்கலாம்.நாம் அதிகம் அழுக்காக்கி கொண்டு வரும்போது அவற்றைஅழுக்கு நீக்க அதிகம் சிரத்தை எடுக்க வேண்டும் என்பதனை அவர்கள் ஆரம்பத்திலிருந்து புரிந்து கொள்வார்கள்.

4-5 வயது- வீட்டிலுள்ள செல்ல பிராணிகளுக்கு உணவூட்டல், மீன்களுக்கு தீனி போடுதல், செடிகளுக்கு நீர் பாய்ச்சல் போன்றவைக்கு வாய்ப்பளிக்கலாம். இதன்மூலம் உயிரினங்கள் உயிர் வாழ உணவு நீர் அவசியம் என்பதனை புரிந்து கொள்கின்றனர்.


>5 YEARS 

நெருப்புடன் சம்பத்தப்படாத சமையல் (Fire less cooking) செய்ய பழக்கலாம்.  juice கரைத்தல் சீனி நீர் எவ்வளவு போட வேண்டும்  என்பதனை சொல்லிக்கொடுக்கலாம். Bread இற்கு  butter jam தடவுதல், ரொட்டி மாவு உருட்டுதல், Snack box pack பண்ணல் சொல்லி கொடுக்கலாம். சமையல் குழந்தைகளின் மூளை விருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் சமையலை கற்றுக் கொள்ளும் குழந்தை தான் செய்ததால் அதனை வீணாக்காமல் உண்ண கற்றுக் கொள்ளும்.


>12 YEARS
Fuse மாற்றல்சுவரில் ஆணிஅடித்தல்,வீட்டிலுள்ள வாகனத்தை பாதுகாக்கும் முறைகள்,பெட்ரோல் நிரப்பும் படிமுறைகள், Plumping வேலைகள் சொல்லி கொடுக்கலாம். 



  



Thursday 23 April 2020

குழந்தைகளுடன் ஆதரவாக இருத்தல் என்றால் என்ன?


அனேகமான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதும், விரும்பிய உணவை சமைத்துக் கொடுப்பதும் ஆதரவு என நினைக்கின்றோம். நாம் வழங்கும் இவ்வகையான சடப் பொருட்களை கொண்டு  எமது ஆதரவை குழந்தைகள் புரிந்துக் கொள்வதில்லை என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.


குழந்தைகளுடன் ஆதரவாக இருத்தல் என்றால் என்ன?

  • குழந்தைகளை பாராட்டுதல்

குழந்தைகளை பாராட்டுவதை  இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  • குழந்தைகளை பாராட்டுதல், அவர்கள் செய்யக்கூடிய செயல்களை பாராட்டுதல்

அநேகமான நேரத்தில் குழந்தைகள் செய்யக்கூடிய தப்பான விடயங்களை பெரிதுபடுத்தும் நாம் அவர்கள் செய்யும் நல்ல விடயங்களை கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றோம். இது தவறான அணுகுமுறையாகும். குழந்தைகள் தாவது ஒரு விடயத்தை செய்யும்போது அல்லது செய்ய முயற்சிக்கும்போது அதனை நன்கு அவதானித்து நேர் மறையான (Positive) வார்த்தைகள் மூலம் பாராட்டுவதே முதன்மையான ஆதரவாகும்.

உதாரணமாக  குழந்தை உறவினரின் பாரமான பையை தூக்கி உதவிசெய்வதை  அவதானித்தால், மற்றவர்களுக்கு முன்னால் இவர் மிகவும் உதவியான பிள்ளை என பாராட்டுதல். இதன்போது இரண்டு வகையான நன்மைகள் கிடைக்கின்றது

1. நாம் செய்யும் விடயங்களை எமது பெற்றோர் அவதானிக்கின்றார்கள் என்பதனை நினைத்து குழந்தை திருப்தி அடையும்.
2. குறிப்பிட்ட நல்ல செயலை தொடர்ந்து செய்வதற்ககு முயற்சி செய்யும்.

குழந்தைகளின் செயல்களை பாராட்டும் அதேவேளை, அவர்களையும் சந்தர்பங்கள் வரும்போது இடைக்கிடையே பாராட்டுதல் அவசியமாகும். உதாரணமாக நீ அழகாக உள்ளாய் என்றவாறு.

  • நமது வாழ்க்கையில் அவர்கள் பிரதான பாகம் வகிப்பவர்கள் என்பதனை வெளிப்படுத்தல்.
உதாரணமாக நீங்கள் பிறந்த பிறகுதான் நாம் சந்தோஷமாக உள்ளோம் எனக்கூறல்.



  • வீட்டில் சின்ன சின்ன முடிவுகள் எடுக்கும் போது குழந்தைகளின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு முடிவு எடுத்தல்.
உதாரணமாக சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் போது அதற்கான இடத்தை தெரிவு செய்ய விடுதல். எமது முடிவுகளுக்கும் எமது பெற்றோர் மதிப்பளிக்கின்றார் என்ற உணர்வை ஏற்படுத்தும்.



  • குழந்தைகள் தவறுகள் செய்யும் போது, தோல்விகளை சந்திக்கும் போது அவர்களுக்கு பக்க பலமாக நின்று அந்த தோல்வியிலிருந்து வெளியே வருவதற்கான வழிகளை சொல்லிக் கொடுத்தல்.
உதாரணமாக குழந்தை பரீட்சையில் தோல்வி அடையும்போது அவர்களை மேலும்  மட்டம் தட்டாமல் அவர்களை உற்சாகப்படுத்தல். இந்தமாதிரி நேரங்களில் மற்றவர்கள் குழந்தைகளை கிண்டல் செய்யும்போது அவர்களுடன் ஆதரவாக இருப்பதுதான் இருப்பதிலேயே சிறந்த ஆதரவாகும்

www.drsanoosiya.blogspot.com.
23.04.2020

Monday 20 April 2020

குழந்தைகளை சலிப்புத்தட்ட விடுவதனால் (Boredom) ஏற்படும் அற்புதமான நன்மைகள் 7


குழந்தைகள் தமக்கு ஒரு வேலையும் இல்லை, சலிப்பு தட்டுகின்றது, boring ஆக உள்ளது  எனக்கூறும் போது பெற்றோர்களாகிய நாம் ஒரு குற்ற உணர்வை உணர்கின்றோம். அவர்களின்  பொழுதை போக்குவதற்காக பல வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். Lock down காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. குழந்தை வளர்ப்பில் இது சரியான அணுகுமுறையா? என்றால், இது பிழையான செயற்பாடாகும்.

உண்மையில் குழந்தைகளுக்கு சலிப்புத்தட்ட அனுமதிக்க வேண்டும். குழந்தைகளை சலிப்புத்தட்ட விடுவதனால் (Boredom) ஏற்படும் அற்புதமான நன்மைகள் பின்வருவனவாகும். 

  • கற்பனை திறனை வளர்ப்பதோடு அவர்களது படைப்பாற்றலை வெளிக்கொணர வாய்ப்பளிக்கின்றது 


படைப்பாற்றல் திறனை குழந்தைகளுக்கு மேலோங்கச் செய்ய வேண்டுமாயின்  boredom அவசியம்.  இது குழந்தைகள் ஓய்வாக இருக்கும்போதே நடைபெறும்.


  • குழந்தைகள் தன்னை பற்றி ஆராய்வதற்கு நேரத்தை செலவழிக்க Boredom  வாய்ப்பளிக்கின்றது.

நான் யார் என்பதை புரிந்து கொள்வதற்கும்  தன்னுடைய மனது என்ன சொல்கின்றது என்பதனை ஆராய Boredom  வாய்ப்பளிக்கின்றது. 



  • கனவு காண தூண்டுகின்றது 

குழந்தைகள் கனவு காண்பது அவசியமான ஒன்றாகும். இன்று பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் யாரோ ஒருவர் தனது ஒய்வு நேரத்தில் கண்ட கனவுகளே ஆகும்.


  • மற்றவர்களின் உதவியின்றி தனிமையில் சந்தோசத்தை தேட கற்றுக்கொடுக்கின்றது 

Boredomயை அனுபவிக்கும் குழந்தைகள் சந்தோசமாக இருப்பதற்கு இன்னொருவர் தேவையில்லை என்ற கோட்பாட்டை புரிந்து கொள்கின்றனர். நான் என்னை விரும்புகின்றேன் என்னுடைய செயற்பாடுகளினால் நான் சந்தோசமாக உள்ளேன் என்ற நிலைக்கு மாறிவிடுகின்றனர்.


  • Boredom இல்லாமலாக்குவதற்கு  gadget வழங்குவது தீர்வல்ல

Gadget மேலும் மேலும் Reward centerயை  தூண்டிவிட்டு  Addiction  என்ற நிலைக்கு கொண்டுசெல்லும். 


  • வெற்றிப் பாதையில் முயற்சிக்க உதவும்.

எப்போதும்  ஏதோ ஒரு விடயத்தில் பிசியாக வைத்திருத்தல் என்பது ஆரோக்கியமான ஒன்றல்ல. இதன் போது அவர்கள் பிறரிடமிருந்து தொடர்ச்சியான தூண்டலை எதிர்பார்த்த வண்ணம் இருப்பர். இது அவர்களது சுய உற்சாகத்தை தடுத்து வெற்றிக்கான தடை கல்லாக மாறும். 

  • கெட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதை தடுக்கின்றது 

Boredomயினால் ஏற்படும் கஷ்டத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தல் அவசியமாகும். Boredom என்பதனை சிறுவயதில் அனுபவிக்காதவர்களே தமது குறுகிய ஆசைகளுக்காக பெரியவர்களாகும் போது கெட்ட பழக்கவழக்கங்களுக்கு (Substance abuse) அடிமையாகின்றனர்.




Friday 17 April 2020

துரு துரு குழந்தைகள் உருவாக்குவதற்கான உளவியல் காரணங்கள்

துரு துரு குழந்தைகள் உருவாக்குவதற்கான உளவியல் காரணங்கள்


1.போதுமான அளவு இரவு தூக்கமின்மை.

குழந்தைகளை பொறுத்தவரையில் குறைந்தது 10-12 மணித்தியால தொடர்ச்சியான இரவு தூக்கம் அவசியமாகும். இதன் போது மூளையிலுள்ள துரு துருப்புக்கு காரணமான நச்சுப் பொருட்கள் அகற்றப்பட்டு காலையில் குழந்தைகள் அமைதியான மனநிலையுடன் எழும்புவார்கள்.

2.முறையற்ற உணவு பழக்கங்கள்

Junk food மற்றும் பதப்படுத்த உணவுகளின் நுகர்வு திரும்பத்திரும்ப அந்த உணவுகளை சாப்பிட தூண்டி Addiction நிலைக்கு கொண்டுசெல்வதுடன் துரு துரு நிலைக்கும் காரணமாகின்றது .
மேலும் புரதம் மாப்பொருள் வைட்டமின் என்பன சமவிகிதத்தில் உணவுகளில் எடுக்கப்படாமையும் மாப்பொருள் சீனி சார்ந்த உணவுகளை அதிகம் உண்பதும் இதற்கு காரணமாகின்றது.

3.போதுமான அளவு உடற்பயிற்சி இன்மை

வெளி விளையாட்டுக்கள் இன்றைய சிறார்களிடம் குறைந்து செல்வதால் உள்ளக சக்தி விரயம் குறைந்து கவனச் சிதறல் அதிகமாக உள்ளது.இதனால் ஒரு விடயத்தில் குறிப்பிட்ட நேரம் மனதை ஒருநிலைப்படுத்த முடியாததனால் அவர்கள் அங்கும் இங்கும் ஓடித்திருக்கின்றனர்.
குழந்தைகளை பொறுத்தவரையில்க்குறைந்தது 90 நிமிடமாவது உடற்பயிற்சி அவசியம் என்பது உளவியலாளர்களின் கருத்தாகும்.இதன் போது உடலின் எல்லா பக்கங்களும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும் உதாரணமாக மரம் ஏறுதல் பந்து விளையாடுதல் போன்றவை

4.Gadget Addiction

விரைவாக அசையும் காட்சிகளை குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் மற்றும் video games மூலமாக பார்ப்பதன் மூலம் விஷேடமாக முன் மூளை விருத்தி பாதிக்கப்பட்டு குழந்தைகள் துரு துரு ஆகின்றனர்.

Wednesday 15 April 2020

பணத்தை பற்றி குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லிக்கொடுக்கலாம்?


பொருளாதார சுதந்திரத்தைஅனுபவிக்கும் மனிதர்களே இன்றைய நெருக்கமான சூழ்நிலையில் தனது வாழ்க்கையை சுமுகமாக கொண்டு செல்கின்றனர். பணத்தை திறமையாக சிறுவயதிலிருந்து கையாலத் தெரிந்தவர்களாலேயே எதிர்காலத்தில் பொருளாதார சுதந்திரத்தை திறம்பட அனுபவிக்க முடியும் என்பது உளவியலாளர்களின் கருத்தாகும்.



விஞ்ஞானத்தை பொறுத்தவரையில்  ஏழு வயதிற்குள் இந்த பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என கருதப்படுகின்றது.
   

பணத்தின் பெறுமதியை குழந்தைகளுக்கு எவ்வாறு கற்றுக் கொடுக்கலாம்?

1.பொருள் அளவில், பணத்தை நிஜ வாழ்க்கையிலும் விளையாட்டிலும் அறிமுகப்படுத்தல். 

சிறிய வயதில் எண்களை புரிந்துகொள்ள முடியாததனால் பொருள் அளவிலேயே  சேமிப்பை கற்றுக்கொடுக்க முடியும்.விளையாட்டில் இதனை முதலில் சொல்லிக் கொடுக்கும் அதேவேளை நிஜவாழ்கையிலும் பிற்காலங்களில் சொல்லிக்கொடுக்கலாம்.

உதாரணமாக கடையில் பொருட்களை நேரடியாக வாங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி குறிப்பிட்ட அளவு பணம் இருந்தால்தான்  குறிப்பிட்ட பொருளை வாங்க முடியும் என்ற உண்மையை குழந்தைகளுக்கு அனுபவத்தின் மூலம்சொல்லி கொடுக்கலாம்.

2.தேவைக்கும் விருப்பத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை சொல்லிக்கொடுத்தல்.

குழந்தைகள் எப்போதும் தாம் காணும் கவர்ச்சியான பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கேற்கும் பழக்கம் உள்ளவர்கள். சிறுவயதிலிருந்து அவர்கள் கேற்கும் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்காமல் தேவையான பொருட்களுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து பழக்குவோமாயின்  பெரியவர்களானாலும் அதனை அவர்கள் கடைபிடிப்பார்கள்.

3.பணத்தை சிறு சிறு பகுதிகளாக பிரித்து பயன்படுத்த சொல்லிக்கொடுத்தல்.
தமக்கு கிடைக்கும்  சிறிய பணமானாலும் அதனை சேமிப்புக்கு ஒரு பகுதியையும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு ஒரு பகுதியையும் பிரித்தெடுத்த பிறகு ஒரு பகுதியை செலவழிக்க கற்றுக்கொடுத்தல். இதற்காக முட்டி அல்லது பெட்டிகளை பயன்படுத்தலாம். 10 வயதுக்கு பிறகு முதலீட்டுக்காகவும் ஒரு பகுதியை பயன்படுத்த பழக்கவேண்டும்.



சிறு வயதிலிருந்து மற்றவர்கள் கஷ்டப்படும் போது பணத்தை வழங்கி உதவி செய்யும் மனப்பாங்கைஉருவாக்கும் போது அது மற்றவர்கள் மீதான இரக்கப் பண்பை வளர்க்க காரணமாகும் . 

4.அறிவுரை வழங்குவதற்கு பதிலாக அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தல்.

பணத்தை பொறுத்தவரையில் உடனே எல்லோரும் பாண்டித்தியம் அடைவதில்லை. பெரியவர்கள் கூட பலதடவை அதனை கையாளும் போதே ஒரு நிலையில் நம்பிக்கையுடன் கையாளுவதற்கு கற்றுக்கொள்கிறோம். அது போலத்தான் குழந்தைகளும்.

உதாரணமாக ஒரு  பெரிய பொருள் வாங்க வேண்டும் என்றால் சிறிது சிறிதாக பணத்தை சேமிக்க வேண்டும் என்பதனை சொல்லிக் கொடுக்கலாம். இதில் தவறு விடும் போது அதன் பிரதிபலனை அனுபவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். 

5.பெற்றோர்கள் பண விடயத்தில் முன்மாதிரியாக இருத்தல்.

நாம் எப்போதும் காசு பணத்தை பற்றி புலம்பிக்கொண்டு கடன் எடுத்துக்கொண்டு இருப்போமாயின் குழந்தைகளும் அதனையே பின்பற்றுவார்கள். இருக்கும் பணத்தை எவ்வாறு செலவழிக்கின்றோம் எவ்வாறு சேமிக்கின்றோம் எவ்வாறு விருத்தி செய்கின்றோம் என்பதனை முன்மாதிரியாக காட்டுவதுடன் நாம் விட்ட பிழைகளை குழந்தைகளுடன் பரிமாறும்போது குழந்தைகள் அதிலிருந்து பணம் பற்றி அனுபவ ரீதியாக கற்றுக்கொள்கின்றார்கள்.



பணத்தை பொறுத்தவரையில் குறைந்தது ஒரு வருடமாவது அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனை சொல்லிக் கொடுக்க வேண்டும். காலத்திற்கு காலம் அதன் பயன்பாடு வேறுபடும். உதாரணமாக பண்டிகை காலம் பாடசாலை ஆரம்பிக்கும் காலம் செலவு கூடிய காலங்களாகும். அதன்போது பணத்தை செலவழிக்கும் விதம் வேறுமாதிரியாக இருக்கும்.
15.04.2020