Thursday 23 April 2020

குழந்தைகளுடன் ஆதரவாக இருத்தல் என்றால் என்ன?


அனேகமான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதும், விரும்பிய உணவை சமைத்துக் கொடுப்பதும் ஆதரவு என நினைக்கின்றோம். நாம் வழங்கும் இவ்வகையான சடப் பொருட்களை கொண்டு  எமது ஆதரவை குழந்தைகள் புரிந்துக் கொள்வதில்லை என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.


குழந்தைகளுடன் ஆதரவாக இருத்தல் என்றால் என்ன?

  • குழந்தைகளை பாராட்டுதல்

குழந்தைகளை பாராட்டுவதை  இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  • குழந்தைகளை பாராட்டுதல், அவர்கள் செய்யக்கூடிய செயல்களை பாராட்டுதல்

அநேகமான நேரத்தில் குழந்தைகள் செய்யக்கூடிய தப்பான விடயங்களை பெரிதுபடுத்தும் நாம் அவர்கள் செய்யும் நல்ல விடயங்களை கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றோம். இது தவறான அணுகுமுறையாகும். குழந்தைகள் தாவது ஒரு விடயத்தை செய்யும்போது அல்லது செய்ய முயற்சிக்கும்போது அதனை நன்கு அவதானித்து நேர் மறையான (Positive) வார்த்தைகள் மூலம் பாராட்டுவதே முதன்மையான ஆதரவாகும்.

உதாரணமாக  குழந்தை உறவினரின் பாரமான பையை தூக்கி உதவிசெய்வதை  அவதானித்தால், மற்றவர்களுக்கு முன்னால் இவர் மிகவும் உதவியான பிள்ளை என பாராட்டுதல். இதன்போது இரண்டு வகையான நன்மைகள் கிடைக்கின்றது

1. நாம் செய்யும் விடயங்களை எமது பெற்றோர் அவதானிக்கின்றார்கள் என்பதனை நினைத்து குழந்தை திருப்தி அடையும்.
2. குறிப்பிட்ட நல்ல செயலை தொடர்ந்து செய்வதற்ககு முயற்சி செய்யும்.

குழந்தைகளின் செயல்களை பாராட்டும் அதேவேளை, அவர்களையும் சந்தர்பங்கள் வரும்போது இடைக்கிடையே பாராட்டுதல் அவசியமாகும். உதாரணமாக நீ அழகாக உள்ளாய் என்றவாறு.

  • நமது வாழ்க்கையில் அவர்கள் பிரதான பாகம் வகிப்பவர்கள் என்பதனை வெளிப்படுத்தல்.
உதாரணமாக நீங்கள் பிறந்த பிறகுதான் நாம் சந்தோஷமாக உள்ளோம் எனக்கூறல்.



  • வீட்டில் சின்ன சின்ன முடிவுகள் எடுக்கும் போது குழந்தைகளின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு முடிவு எடுத்தல்.
உதாரணமாக சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் போது அதற்கான இடத்தை தெரிவு செய்ய விடுதல். எமது முடிவுகளுக்கும் எமது பெற்றோர் மதிப்பளிக்கின்றார் என்ற உணர்வை ஏற்படுத்தும்.



  • குழந்தைகள் தவறுகள் செய்யும் போது, தோல்விகளை சந்திக்கும் போது அவர்களுக்கு பக்க பலமாக நின்று அந்த தோல்வியிலிருந்து வெளியே வருவதற்கான வழிகளை சொல்லிக் கொடுத்தல்.
உதாரணமாக குழந்தை பரீட்சையில் தோல்வி அடையும்போது அவர்களை மேலும்  மட்டம் தட்டாமல் அவர்களை உற்சாகப்படுத்தல். இந்தமாதிரி நேரங்களில் மற்றவர்கள் குழந்தைகளை கிண்டல் செய்யும்போது அவர்களுடன் ஆதரவாக இருப்பதுதான் இருப்பதிலேயே சிறந்த ஆதரவாகும்

www.drsanoosiya.blogspot.com.
23.04.2020

No comments:

Post a Comment