Wednesday 15 April 2020

பணத்தை பற்றி குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லிக்கொடுக்கலாம்?


பொருளாதார சுதந்திரத்தைஅனுபவிக்கும் மனிதர்களே இன்றைய நெருக்கமான சூழ்நிலையில் தனது வாழ்க்கையை சுமுகமாக கொண்டு செல்கின்றனர். பணத்தை திறமையாக சிறுவயதிலிருந்து கையாலத் தெரிந்தவர்களாலேயே எதிர்காலத்தில் பொருளாதார சுதந்திரத்தை திறம்பட அனுபவிக்க முடியும் என்பது உளவியலாளர்களின் கருத்தாகும்.



விஞ்ஞானத்தை பொறுத்தவரையில்  ஏழு வயதிற்குள் இந்த பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என கருதப்படுகின்றது.
   

பணத்தின் பெறுமதியை குழந்தைகளுக்கு எவ்வாறு கற்றுக் கொடுக்கலாம்?

1.பொருள் அளவில், பணத்தை நிஜ வாழ்க்கையிலும் விளையாட்டிலும் அறிமுகப்படுத்தல். 

சிறிய வயதில் எண்களை புரிந்துகொள்ள முடியாததனால் பொருள் அளவிலேயே  சேமிப்பை கற்றுக்கொடுக்க முடியும்.விளையாட்டில் இதனை முதலில் சொல்லிக் கொடுக்கும் அதேவேளை நிஜவாழ்கையிலும் பிற்காலங்களில் சொல்லிக்கொடுக்கலாம்.

உதாரணமாக கடையில் பொருட்களை நேரடியாக வாங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி குறிப்பிட்ட அளவு பணம் இருந்தால்தான்  குறிப்பிட்ட பொருளை வாங்க முடியும் என்ற உண்மையை குழந்தைகளுக்கு அனுபவத்தின் மூலம்சொல்லி கொடுக்கலாம்.

2.தேவைக்கும் விருப்பத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை சொல்லிக்கொடுத்தல்.

குழந்தைகள் எப்போதும் தாம் காணும் கவர்ச்சியான பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கேற்கும் பழக்கம் உள்ளவர்கள். சிறுவயதிலிருந்து அவர்கள் கேற்கும் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்காமல் தேவையான பொருட்களுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து பழக்குவோமாயின்  பெரியவர்களானாலும் அதனை அவர்கள் கடைபிடிப்பார்கள்.

3.பணத்தை சிறு சிறு பகுதிகளாக பிரித்து பயன்படுத்த சொல்லிக்கொடுத்தல்.
தமக்கு கிடைக்கும்  சிறிய பணமானாலும் அதனை சேமிப்புக்கு ஒரு பகுதியையும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு ஒரு பகுதியையும் பிரித்தெடுத்த பிறகு ஒரு பகுதியை செலவழிக்க கற்றுக்கொடுத்தல். இதற்காக முட்டி அல்லது பெட்டிகளை பயன்படுத்தலாம். 10 வயதுக்கு பிறகு முதலீட்டுக்காகவும் ஒரு பகுதியை பயன்படுத்த பழக்கவேண்டும்.



சிறு வயதிலிருந்து மற்றவர்கள் கஷ்டப்படும் போது பணத்தை வழங்கி உதவி செய்யும் மனப்பாங்கைஉருவாக்கும் போது அது மற்றவர்கள் மீதான இரக்கப் பண்பை வளர்க்க காரணமாகும் . 

4.அறிவுரை வழங்குவதற்கு பதிலாக அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தல்.

பணத்தை பொறுத்தவரையில் உடனே எல்லோரும் பாண்டித்தியம் அடைவதில்லை. பெரியவர்கள் கூட பலதடவை அதனை கையாளும் போதே ஒரு நிலையில் நம்பிக்கையுடன் கையாளுவதற்கு கற்றுக்கொள்கிறோம். அது போலத்தான் குழந்தைகளும்.

உதாரணமாக ஒரு  பெரிய பொருள் வாங்க வேண்டும் என்றால் சிறிது சிறிதாக பணத்தை சேமிக்க வேண்டும் என்பதனை சொல்லிக் கொடுக்கலாம். இதில் தவறு விடும் போது அதன் பிரதிபலனை அனுபவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். 

5.பெற்றோர்கள் பண விடயத்தில் முன்மாதிரியாக இருத்தல்.

நாம் எப்போதும் காசு பணத்தை பற்றி புலம்பிக்கொண்டு கடன் எடுத்துக்கொண்டு இருப்போமாயின் குழந்தைகளும் அதனையே பின்பற்றுவார்கள். இருக்கும் பணத்தை எவ்வாறு செலவழிக்கின்றோம் எவ்வாறு சேமிக்கின்றோம் எவ்வாறு விருத்தி செய்கின்றோம் என்பதனை முன்மாதிரியாக காட்டுவதுடன் நாம் விட்ட பிழைகளை குழந்தைகளுடன் பரிமாறும்போது குழந்தைகள் அதிலிருந்து பணம் பற்றி அனுபவ ரீதியாக கற்றுக்கொள்கின்றார்கள்.



பணத்தை பொறுத்தவரையில் குறைந்தது ஒரு வருடமாவது அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனை சொல்லிக் கொடுக்க வேண்டும். காலத்திற்கு காலம் அதன் பயன்பாடு வேறுபடும். உதாரணமாக பண்டிகை காலம் பாடசாலை ஆரம்பிக்கும் காலம் செலவு கூடிய காலங்களாகும். அதன்போது பணத்தை செலவழிக்கும் விதம் வேறுமாதிரியாக இருக்கும்.
15.04.2020

No comments:

Post a Comment