Friday 8 May 2020

குழந்தைகளுக்கு அல்லாஹ்வை எவ்வாறு அறிமுகப்படுத்தலாம்?


குழந்தைகளுக்கு அல்லாஹ்வை அறிமுகப்படுத்தல் என்பது பெற்றோர்களை பொறுத்தவரையில் பாரிய இலக்குகளில் ஒன்றாகும். துரதிஷ்டம்  என்னவென்றால் அநேக பெற்றோர்கள்  குழந்தைகளுக்கு அல்லாஹ்வை முதலில் ஒரு தண்டனையாளனாகவே அறிமுகப்படுத்துகின்றனர். ‘’நீ இப்படி செய்தால் அல்லாஹ் நெருப்பில் பழுக்க காய்ச்சிய இரும்பால் வாயில் சுடுவான்’’ எனக்கூறல் எமது வீடுகளில் அச்சுறுத்தலுக்காக பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றாகும். இது குழந்தைகளுக்கு ஆரம்ப பருவத்திலேயே அல்லாஹ்வை ஒரு தண்டனையாலனாக அறிமுகப்படுத்துகின்றோம். இது பின்னைய  நாற்களில்  மார்க்கத்தின் மீது பற்றை குறைப்பதற்கு ஏதுவாகின்றது.

Sister Samina (Founder of Ayeina.com) தனது வாழ்க்கை அனுபவத்தினூடாக அல்லாஹ்வை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது சம்பந்தமாக பல பயனுள்ள தகவல்களை பின்வருமாறு பகிர்கின்றார்.

 குழந்தைகளுக்கு அல்லாஹ்வை எவ்வாறு அறிமுகப்படுத்தலாம்?

1.குழந்தைகளுக்கு அல்லாஹ்வுடைய திருநாமங்களில் அவனது அன்பை வெளிப்படுத்தும் நாமங்களை அறிமுகப்படுத்தல். 

ஐந்து வயதிற்கு உற்பட்ட குழந்தைகளுக்கு அல்லாஹ்வை முதலில் ஒரு தண்டனையாளனாக அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக அர் ரஹ்மான்(அன்பாளன்) அல் வதூத் (இரக்கமுள்ளவன்) போன்ற அன்பை வெளிப்படுத்தும் நாமங்களை கொண்டு அறிமுகப்படுத்தலாம். மேலும் நரகம் பற்றியும் இறுதிநாள் நிகழ்வுகளையும் சற்று பெரியவர்களான பிறகு விளக்கப்படுத்தலாம்.


2.அல்லாஹ் எம்முடன் அதிகம் இரக்கமுள்ளவன் என்பதனை உதாரணங்கள் மூலம் வெளிப்படுத்தல்.
ஆசிரியர் இதற்காக தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்கின்றார்.

தனது நான்கு வயது குழந்தை அவரது சிறிய சகோதரிக்கு விளையாட்டுப் பொருட்களை கொடுத்து விளையாடிக்கொண்டு இருக்கும்போது அவரை பாராட்டிய நான்,

 ''நீங்கள் உங்கள் சகோதரி மீது வைத்திருக்கும் அன்பானது அல்லாஹ் நம் மீது வைத்திருக்கும் அன்பின் வெறும் ஒரு வீதமே ஆகும். அல்லாஹ் தனது அன்பை நூறாக பிரித்து அதில் ஒரு வீதத்தை பூமிக்கு அனுப்பி வைத்தான். மீதி தொண்ணுதொன்பது வீதத்தை தன்னளவில் வைத்துக்கொண்டான். அந்த ஒரு வீத அன்பையே நாம் நமது அன்பானவர்களுக்கு இடையில் (நீங்கள் உங்கள் சகோதரியிடம் வைத்துள்ள அன்பை போல) பகிர்ந்து கொள்கின்றோம். ஆகவே அல்லாஹ் நம் மீது எவ்வளவு அன்பாளன் என்பதனை கற்பனை செய்து பாருங்கள்.'' என்று கூறினேன்.


3.சுவர்க்கம் பற்றிய தகவல்களை அதிகம் அதிகம் குழந்தைகளுடன் பரிமாறுதல்.

இவ்வுலகில் நாம் கஷ்டப்படும்போது அநியாயங்கள் நிகழ்த்தப்படும்போது படைப்பாளன் எங்கேஎன்ற கேள்விக்குறி எழுவது சாதாரணம். இந்த நிலையில் இந்த உலகம் நிலையற்றது எமது நற் செயல்களுக்கான கூலியை மறு  உலகில் அல்லாஹ் சுவர்க்கத்தில் தயார்படுத்தி உள்ளான் என்ற சுவர்க்கம் பற்றிய பலமான நம்பிக்கை எமது மார்க்க நம்பிக்கையை வலுவூட்டுகின்றது. இதே போல இந்த பலமான நம்பிக்கையை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே விதைக்கும் போது அது அல்லாஹ்வின் வல்லமையை குழந்தைகள் புரிந்துக் கொள்ள ஏதுவாகஇருக்கும்.

ஆசிரியர் தனது மூன்று வயது குழந்தைக்கு சுவர்க்கத்தின் பிரமிக்கத்தக்க காட்சிகளை ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும் முன் கூறுவதாக குறிப்பிடுகின்றார்.
நமது ஐம்புலத்தினாலும் என்றுமே உணராத சுவனத்து காட்சிகள், ஒலிகள் ,சுவைகள், மணங்கள், மற்றும் தொடுகை உணர்வுகளை அவர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப் படுத்துவதாக கூறுகின்றார்.


4.தொழுகையை குழந்தைகளுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தல்.

தொழுகையே எம்மை படைத்தவனுடன் தொடர்புக்  கொள்ள சிறந்த தளம் என்பதனை முன்மாதிரியாக நின்று செயற்படுத்தி காட்டுதல்.


5.உடல் உள ரீதியாக குழந்தைகள் கஷ்டத்தை உணரும் போது அவர்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தளமாக அல்லாஹ்விடம் இறைஞ்சும் துஆவை அவர்களது வயதிற்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தல்.


6.குழந்தைகளுக்கு நல்லது கெட்டது  எது நடந்தாலும் அல்லாஹ்வை தொடர்புபடுத்தல்.

குழந்தைகளுக்கு நல்லது நடக்கும் போது ‘’அல்ஹம்துலில்லாஹ் இது அல்லாஹ் உங்கள் மீது உள்ள அன்பினால் ஏற்படுத்தி தந்தான்’’ என்று கூறும் அதேவேளை கெட்டது நடக்கும் போது ‘’இதுவும் அல்லாஹ்வின் நாட்டத்தினாலேயே ஏற்பட்டது பெரிய தீங்கு ஒன்று நடப்பதிலிருந்து அல்லாஹ் எம்மை பாதுகாத்தான்’’ என்ற உண்மையையை குழந்தைகளுக்கு சொல்லுதல்.


Reference:- Ayeina.com






 

No comments:

Post a Comment