Sunday 8 November 2020

வன்முறை சூழலில் வாழும் குழந்தைகளை எவ்வாறு கையாளலாம்?

 வன்முறை சூழலில் வாழும் குழந்தைகளை எவ்வாறு கையாளலாம்?



இன்றைய நவீன நூற்றாண்டில்  வன்முறை கலாச்சாரம் என்பது எங்கும் பரவலாக காணப்படுகின்ற ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகள் மத்தியில் தொலைக்காட்சி மற்றும் கார்ட்டூன்களின் செல்வாக்கு அதிகமாக உள்ளதனால் அதன் ஊ டான வன்முறைகள் குழந்தைகளினால் அதிகம் உள்வாங்கப்படுகின்றது.

அதேநேரத்தில் குழந்தைகள் என்பவர்கள் தாம் எவ்வாறான சூழலில் வளர்க்கப்படுகின்றார்களோ அதனை இயல்பான சாதாரணமானது என உணர்ந்து கொள்கின்றார்கள். இவ்வாறான வன்முறை சூழலில் வளரும்  குழந்தைகளிடம் 3 வகையான விளைவுகளை எதிர்பார்க்கலாம் என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

1.தான் அவதானிக்கும் வன்முறை தனக்கும் ஏற்படலாம் என குழந்தைகள் அதிகமாக பயப்படுதல்.

2.வன்முறையாலாளர்களை போல தாமும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தல்.

3.அமைதியாக வன்முறையை ஏற்றுக்கொண்டு அதனை கையாள தெரியாததனால் அது அவர்களது ஆளுமையில்(personality) பாதிப்பை ஏற்படுத்துகின்றது.



இவ்வாறான சந்தர்ப்பங்களில் வன்முறை கலாச்சாரத்திலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கலாம்.

1.பெற்றோர்கள் முன்மாதிரியாக செயற்படுதல்.

குழந்தைகளிடம் எமது கோபத்தை வன்முறைமூலம் வெளிப்படுத்துவதை முற்றாக தவிர்த்தல். குழந்தைகளை அடிப்பது மட்டுமல்லாமல் கெட்ட  வார்த்தைகளால் ஏசுதல், நீ எதற்கும் உருப்படி இல்லாதவன் எனக்கூறுதலும் வன்முறையையே

கோபத்தில் தவறுதலாக இவற்றை வெளிப்படுத்தினாலும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பதன் மூலம் எமது முன்மாதிரியை வெளிப்படுத்தலாம். மாறாக நாம் கோபப்படலாம் நீ அவ்வாறு செய்யக்கூடாது என்று கற்றுக்கொடுக்கும் போது பாடசாலையில் தன்னை விட பலவீனமான குழந்தைகளிடம் மிரட்டல்  அடித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும்.

2.வன்முறைகள் சூழலில் நடந்தேறும்போது அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கலந்துரையாடல்

எமது வீட்டிலோ வீட்டிற்கு அருகாமையிலோ வன்முறைகள் அரங்கேற்றப்படும் போது அதனை குழந்தைகள் பார்க்க நேரிட்டால் அதுபற்றி ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ளல் அவசியமாகும். இவ்வாறான அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடமே கேள்வி எழுப்பி தீர்வுகளை வழங்கலாம். உதாரணமாக எதிர்பாராத கொலைகள் அரங்கேற்றப்படும்போது தெரியாதவர்கள் கதவை தட்டினால் கதவை திறக்கக் கூடாது போன்ற பாதுகாப்பு சட்டங்களை அவர்களுக்கு இதன் போது சொல்லிக்கொடுக்கலாம்.

3.சிறிய குழந்தைகளை நன்றாக களிமண்ணில் விளையாட விடுதல்

சிறிய குழந்தைகளை(<8years) ஈர மணலில் விளையாட விடுவதன் மூலம் அவர்களிடமுள்ள மன அழுத்தத்திலிருந்து வெளியேற வாய்ப்பளிக்களாம். இதன்போது  பயங்கரமான சூழ் நிலையிலிருந்து வெளியேறுவதற்கான சூழ் நிலை அதிகமாகும்.

4.குழந்தைகள் வன்முறைகளை மற்றவர்களிடம் பிரயோகிக்கும்போது அதற்கான மாற்று வழிமுறைகளை கலந்துரையாடுதல்.

தனது சக நண்பர்களிடம் வன்முறையை குழந்தைகள் பிரயோகிப்பதை அவதானிக்கும்போது அவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுரை கூறுவதற்கு பதிலாக அவர்கள் வன்முறையை பிரயோகித்ததற்கான காரணத்தை இனங்கண்டு அதனை எவ்வாறு சுமுகமான வழிகளில் தீர்க்கலாம் என்பதனை அவர்களுடன் கலந்துரையாடல். உதாரணமாக குழந்தை மற்றைய குழந்தையை அடிக்கும் போது அடித்ததற்கான காரணத்தை வினவுவதுடன் அதனை வேறு எவ்வாறான வழிகளில் சரிபடுத்தலாம் என்பதனை குழந்தையுடன் கலந்துரையாடுதல்.

5.வன்முறையை ஊக்குவிக்கும் தொடர்புசாதனங்களை துண்டித்தல்

வன்முறையை  குழந்தைகளுக்கு ஊக்குவிக்கும் கார்ட்டூன் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதனை முற்றாக தடைசெய்தல்.மாறாக வேறுவகையான பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தல்.

6.தமக்கு ஏற்பட்ட எதிர்மறையான நிகழ்வுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கல்

தனக்கு ஏற்பட்ட எதிர்மறையான நிகழ்வுகளை குழந்தைகள் அழுகையினூடாகவோ சிரிப்பினூடாகவோ உணர்வுபூர்வமாக வெளிக்கொணர நன்றாக பேச விடுதல்.



2020.11.08

No comments:

Post a Comment