Tuesday 2 August 2022

 

திறமைக்கான கல்வி பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றதா? 

கடந்த தசாப்தத்தில் புத்தள மண்ணில் ஏற்பட்ட கல்வி புரட்சி என்பது இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றிலேயே பதியப்பட்ட வேண்டிய சாதனை என்றே கூற வேண்டும்.

நாம் உயர்தரம் கற்கும் காலங்களை எடுத்தோமேயானால் ‘’விஞ்ஞான துறையா! அதுவும் புத்தளத்தில் கற்கப்போகின்றீர்களா? காலத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் வேறு துறையை தெரிவு செய்து முன்னேறப் பாருங்கள்!’’ என்று ஆங்காங்கே எமது காதுகளுக்கு வந்துச்சென்ற ஒலிச் சமிஞ்சைகள் இன்றும் நினையாத வடுக்கள்தான். அதன் பின் புத்தளத்தில் ஏற்பட்ட கல்வி புரட்சி அவ்வாறு சமிஞ்சை காட்டியவர்களை விலாசம் இல்லாமல் அழித்துச்சென்றது.

இந்தக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க ஒரு தசாப்தத்தின் பின் எமது சமூகம் இன்று எதிர்நோக்கியுள்ள பாரிய சவால் பற்றி அலசுவதே இவ் ஆக்கத்தின் நோக்கம். படித்து என்ன பயன் வேலையில்லேயே. எனது தொழிலுக்கும் நான் படித்த படிப்புக்கும் சம்மந்தம் உள்ளதா? ஏன் எனக்கு எனது தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை? என்ற ஆதங்கத்துடன் கலந்த முணுமுணுப்புகள் ஆங்காங்கே இன்று பரவலாக கேட்கக்கூடியதாக உள்ளது.

இந்தியாவில் சிலகாலங்களுக்கு முன்னால் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு பிள்ளை எந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதனை தீர்மானிப்பது  யார்? என்பதே அந்த ஆய்வு. அதன் முடிவு ஆச்சிரியத்துக்கு உடையதாக இருந்தது.பக்கத்து வீட்டு அம்மா என்பதே அதன் முடிவு. இது ஆச்சிரியமான முடிவு என்றாலும் இன்றைய சூழலை பொறுத்த வரையில் நிதர்சனமான உண்மையும் அதுவே. ஒருவர் ஒரு துறையில் அந்தஸ்து ரீதியிலும் பண ரீதியிலும் கொடிகட்டி பறக்கும் போது இனிப்பை நாடி பறக்கும் ஈக்களை போல எல்லோரும் அந்தத் துறையை நோக்கி ஓடுவது இன்று பரவலாக காணமுடிகின்றது. இதன் விளைவு வேலை இல்லாத பட்டதாரிகள் சங்கத்தை ஆங்காங்கே நிறுவ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இறைவனால் படைக்கப் பட்ட ஒவ்வொரு மனிதனின் திறமையும் தனித்துவமானது.ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட முடியாது. 1983களில் வாழ்ந்த உளவியலாளர் Haward Gardener Multiple intelligent concept யை எமக்கு விட்டுச்சென்றார். அவர் கூறுவது என்னவென்றால் அறிவு என்பது ஒன்பது வகையானது.  Naturalistic, musical, Logical, Interpersonal, Existential, Bodily kinaesthetic, Linguistic, Intra personal, Spatial Intelligent என அவற்றை வகைப்படுத்துகின்றார். நீங்கள் ஒன்பது வகைக்கும் வாய்ப்பை உங்கள்குழந்தைகளுக்கு கொடுத்தால்,  எந்த intelligent  அவர்களிடம் பலம் வாய்ந்ததாக உள்ளதோ அது மிகவும் பலம் வாய்ந்ததாக விருத்தி அடையும். எந்த intelligent சாதாரணமாக அல்லது பலவீனமாக உள்ளதோ அதனையும் விருத்தி அடையச்செய்யலாம். ஆனால்  அதில் நிபுணத்துவம் அடைய முடியாது.

உதாரணமாக Interpersonal Intelligentயை எடுத்தோமேயானால் மற்றவர்களை புரிந்துக்கொண்டு சிறந்த தொடர்பை ஏற்படுத்தக் கூடியவர்கள். தேர்ச்சிப் பெற்ற அரசியல்வாதிகளாக, ஆசியர்களாக, சமூக தொண்டர்களாக உருவெடுப்பார்கள்.

அதேபோல Bodily kinaesthetic Intelligentயை பெற்றோர் உடலியல் திறன் கொண்டவர்கள். விளையாட்டு வீரர்களாக, சத்திர சிகிச்சை நிபுணர்களாக உருவாகுவார்கள். Interpersonal Intelligent-மார்க்கத்தொண்டர்கள், உளவியலாளர்கள். Linguistic Intelligent-எழுத்தாளர்கள், கவிஞர்கள். Spatial Intelligent-மாலுமிகள் விமானிகள்…

இந்த கொள்கையைத்தான் உலகில் கல்வித்திட்டத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகள் இன்று பின்பற்றி தனது குழந்தைகளை உலகை ஆளும் வர்க்கமாக மாற்றுகின்றனர்.

உதாரணமாக இஸ்ரேல் நாட்டை  பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகிலேயே வெறும் இரண்டரை கோடி மக்களை கொண்ட இந்த யூத வர்க்கமே  உலகையே ஆட்டிப்படைக்கும் வர்க்கமாக இன்று வரை காணப்படுகின்றது. இவர்களது புலனாய்வு துறையான மொசாட் நிறுவனம் உலகில் செய்து முடித்த, செய்து கொண்டிருக்கின்ற கைங்கரியங்களை எழுத்துக்களால் எழுதி முடிக்க முடியாது. வெறும் இரண்டரை கோடி மக்களை உலகில் கொண்ட இவர்களில் நோபல் பரிசு வென்றவர்கள் 190 பேருக்கும் அதிகம். இஸ்ரேல் நாட்டில் வாழும் ஒன்றரை கோடி யூத மக்களிலே 20-30 இலட்ச விஞ்ஞானிகள் உள்ளார்கள் என கணக்கெடுப்புகள் கூறுகின்றன. 99 வீதமான மக்கள் ஹீப்ரு, அரபு மற்றும் ஆங்கிலம் சரளமாக கதைப்பார்களாம். 90 வீதமான மக்கள் 5 மொழி கதைக்கக் கூடியவர்கலாம். 

இந்த அளவு  புத்திசாலிகளாக யூதர்கள் இருப்பதற்கு காரணம்  அவர்களது நிபுணத்துவம் வாய்ந்த கல்வி திட்டமே   என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 3-12 வயதெல்லைக்குள் குழந்தையின் திறமை எந்த துறையில் உள்ளது என்பதனை கண்டு பிடிப்பதில் இஸ்ரேலியர்கள் வல்லவர்கள். திறமையை கண்டு பிடித்ததன் பிற்பாடு அந்தக்குழந்தையை அந்தத் துறையில் மட்டுமே வழிகாட்டுகின்றனர்.

உதாரணமாக ஒரு குழந்தைக்கு விவசாயத்தில் ஆர்வம் உள்ளது என்பதனை ஐந்து வயதில் இனங்கண்டு கொள்வார்களானால் அதன் பின் அந்த குழந்தையை அந்த துறையிலேயே வழி நடத்திச் செல்வார்கள்.இவ்வாறு விவசாயத்தில் ஆர்வமுள்ள குழந்தையை சுமார் 20 வருடங்கள் தாவரங்களுடனும் மண்ணுடனும் ஒன்றினையச்  செய்வோமாயின் 25 வயதில் அந்தக்குழந்தை அந்தத் துறையில் விஞ்ஞானியாகுவதும் 40 வயதில் நோபல் பரிசு பெறுவதும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

அதனால்தான் சுவாமி விவேகானந்தர் கூறினார் 'புத்தகம் படிப்பது படிப்பில்லை. உங்கள் குழந்தைகளின் உள்ளிலுள்ள திறமைகளை வெளிக்கொணர்வதே உண்மையான கல்வி' என்று.

அன்று 13 வயது சிறுவனாக இருந்த Bill Gates தனது தாயிடம் கூறினான். ‘’தாயே! எனக்கு computer programmeயில் ஆர்வம் இருக்கின்றது அதில் புரட்சி செய்யப் போகின்றேன்’’ என்று. அவன் மனதில் ஏற்பட்ட திறமையுடன் கூடிய கடின உழைப்புத்தான் Microsoft  நிறுவனத்தை உருவாக்கி  அவரை உலக பணக்காரன் ஆக்கியது.

ஆகவே மாணவனே! உனது திறமையை சரியான விதத்தில் இனங்கண்டு அதை நோக்கி கடினமாக உழைப்பாயானால் டாக்டர் என்ன! இன்ஜினியர் என்ன! உன்னால் ஒரு Bill Gates ஆக அப்துல் கலாமாக  புத்தள மண்ணிலும் உதித்துவிட்டுச் செல்லலாம்.

உன்  திறமைக்குள்  ஆன்மீகத்தை மெல்ல கலந்துவிடுவாயாயின் இந்த நாஸ்திகர்கள் என்ன! இவர்களை விட பல மடங்கு உயரத்தில் உனது அந்தஸ்து ஈருலகிலும் உயர்ந்துச்செல்லும்.

டாக்டர் சனூஷியா மஹ்மூத்

புத்தளம்.

20.02.2020

No comments:

Post a Comment