Wednesday 18 December 2019


All rights reserved @ Allah’presence

அந்த எழுபது வயது மதிக்கத்தக்க வயோதிப மனிதரை நான் முதலில் சந்தித்தது வைத்தியசாலை நுழைவாயிலில்.

''அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,

  நான் ஆஸ்துமா நோய் காரணமாக இரண்டு நாட்களாக தங்கி இருந்து  சிகிச்சை பெற்று இன்று வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டேன். நான்  கிழக்கு மாகாணத்தைச்  சேர்ந்தவன். எனது குடும்பத்திற்கு இது பற்றி அறிவிக்க  வழியில்லாததால் யாரும் என்னை கூட்டிச்  செல்ல வரவில்லை. உங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை தருவீர்களானால் அது பேருதவியாக இருக்கும். பிற மதத்தவர்களிடம் கேட்க வெட்கமாக உள்ளது. உங்களிடம் மட்டுமே இது பற்றி வினவுகிறேன்.''

ஒரு சிறு தொகையை அவரது கையில் நீட்டியவளாக எனது பயணத்தை தொடர்ந்தேன். 

இந்த சம்பவம் நடந்து சிறு நாட்கள் கழித்து அதே மனிதரை ஒரு வார்த்தை மாறாமல் அதே கதையுடன் வைத்தியசாலை நடைபாதையில் சந்தித்தேன். நான் clinical coat அணிந்திருந்ததால் அவரால் என்னை இனங்காண முடியவில்லை. எனது கோபத்தை முகப்பாவனையில் காட்டிவிட்டு அவரிடமிருந்து கடந்து சென்றேன்.

சில வாரங்கள் கழித்து அதே நபர் வேறு கதை ஒன்றை கூறி பணம் பெற்றுக்கொள்ள நான் கடமையாற்றும் wardற்குள் நுழைய முற்பட்டார்.  எனக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. அவரை கடுமையாக ஏசிய பிற்பாடு அந்த ஏமாற்று மனிதரைப்  பற்றி எனது மாற்று மத நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.

இந்த சம்பவத்தை பார்த்தும்  கேட்டும் கொண்டிருந்த ஒரு மாற்று மத நண்பி தனது அனுபவத்தை பின்வருமாறு பகிர்ந்து கொண்டார்.

''அப்படியா! ஒருநாள் என்னுடைய boyfriendவுடன் பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த போது இரண்டு மூன்று பிள்ளைகளுடன் ஒரு நடுத்தர வயது முஸ்லிம் பெண்ணை சந்தித்தோம். இது போன்ற கவலைக்கிடமான கதை ஒன்றை கூறி எம்மிடம் பணம் கேட்டார். எனது boyfriend தீர ஆராயாமல் ஒரு கணிசமான தொகையை அந்தப்  பெண்ணிடம் கொடுத்து அனுப்பினார். அவரின் இந்த வினோதமான செயல் எனக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அவரிடம் வினவினேன். அதற்கு அவர் 'அனேகமான முஸ்லிம்கள் பொய் சொல்வதில்லை' என்றார்.''

இந்த இரண்டு சம்பவங்களிருந்தும்  நாம்  பெறும் படிப்பினை,
  1. 'பொய் சொல்லுதல் பெரும் பாவங்களில் ஒன்று' என்ற அடிப்படை மார்க்கப் போதனை எமது சமயத்தவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. மற்றும்
  2. மாற்று மதத்தவர்களின் எமது சமயம் பற்றிய எதிர்பார்ப்புகள் இத்தகைய சம்பவங்களினால் வீணடிக்கப்படுகின்றது.
www.drsanoosiya.blogspot.com

By ART OF PARENTING at 19th of December 2019

For English article

http://MISUSABLE ISLAMIC PRINCIPLES SHOULD BE RECONSTRUCTED





No comments:

Post a Comment