Wednesday 22 January 2020

உங்கள் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக்கொடுக்க விரும்பும் மொழி எது?



ரு குழந்தையின் மொழி வளர்ச்சியானது அவர்களின் பிறப்பிலேயே ஆரம்பிக்கப்படுகின்றது. அதேநேரத்தில் ஒரு குழந்தைக்கு யாராலும் எப்படி பேச வேண்டும் என சொல்லிக்கொடுக்க முடியாது. பெற்றோர்களாகிய நாம்  சரியான சூழலை அமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் சுயமாக பேச ஆரம்பிப்பார்கள்.



தும்மினாலும் தன்  குழந்தை ஆங்கிலத்தில் தும்ம வேண்டும் என்ற ஆங்கில மோகத்தில் வாழும் இன்றைய நவீன  பெற்றோர்களுக்கிடையில்  உள்ள அடுத்த சவால் குழந்தைகள் பேச ஆரம்பித்தவுடன் எந்த மொழியை முதலில் அறிமுகப் படுத்துவது என்பதாகும்.

குழந்தைகளை பொறுத்த வரையில் சிந்தனைக்கு உண்டான மொழி தாய் மொழியாகவே இருத்தல் வேண்டும்.

தாய் மொழியில் சிந்தனை நன்றாக  வளர்ந்து விட்டது என்றால் அதற்கு அப்பால் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும் என ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. 
அதனால்தான் ஜப்பான், ஜெர்மனி போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் முக்கியத்துவம் முதலில் கொடுப்பது தாய் மொழிக்குத்தான்.



தாய் மொழியை முதலில் கற்றுக்கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகள பின்வருமாறு


  • குழந்தைகளின் சமூக விருத்தியில் உதவுகின்றது.



குழந்தைகளை சுற்றி வாழும் உறவினர்கள் குறிப்பாக தாத்தா பாட்டியுடன் தொடர்பாடலை மேற்கொள்ள தாய் மொழி அவசியமாகும். அவர்களுடனான உறவு மற்றும் தகவல் பரிமாற்றம் குழந்தைகளின் சமூக வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செலுத்துகின்றது.
  • குழந்தைகள் தாய் மொழியில் சிறப்பாகவும் விரைவாகவும் கற்றுக் கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகளின் critical thinking மற்றும் literacy skill விருத்தியில் உதவுகின்றது.
  • தனது அடையாளத்தை குழந்தைகள் தாய்மொழி மூலமே பிரதிநிதித்துவ படுத்துகிறார்கள். தனது மூதாதையினுடனான இணைப்பை தாய் மொழி வழங்குகின்றது.
  • குழந்தைகளால் தாய் மொழி மூலமே தனது உணர்வுகளை சரியான விதத்தில் வெளிப்படுத்த முடியும்.




ஆகவே பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளுக்கு முதலில் தாய் மொழியை கற்றுக்கொடுப்போம். தாய் மொழியில் நன்றாக சிந்தித்து ஜோக்ஸ் கூறுமளவுக்கு சிந்தனையை வெளிப்படுத்த, தனது தேவைகளை பரிமாற வழிவகுப்போம். 

By ART OF PARENTING at 23th of January 2020

No comments:

Post a Comment