Saturday 25 January 2020

உங்கள் குழந்தைக்கு பிற மொழி கற்றுக் கொடுத்தல் அவசியமா?


தாய் மொழி சிந்தனைக்கு உண்டான முதலாவது  மொழி என்றால் பிற மொழிகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தல் அவசியமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழலாம். இரண்டாவது மொழி கற்றலும் அவசியமான ஒன்றே.

பிற மொழி கற்பதனால் ஏற்படும் நன்மைகள்.

  1. குழந்தைகளின் ஆக்கத்திறனை (Creative skill) வளர்கின்றது. 
  2. பிரச்சனைகளை தீர்க்கும் திறன் (Problem solving skill) வளர்கின்றது.  .
  3. மற்றவர்களுடனான தொடர்பாடலை எளிதாக்குகின்றது.
  4. மூளை விருத்தியில் பங்களிப்பு செலுத்துகின்றது. (Higher test score)
  5. பிற கலாச்சாரத்தை மதித்து நடப்பதற்கு உதவுகின்றது.


இரண்டாவது மொழியை எப்போது கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற விடயத்தில் உளவியாளர்களுக்கிடையில் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன.
  • ஏழு வயதிற்குள் நிறைய மொழிகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி முடிவுகளும் உண்டு.
  • ஏழு வயது வரை ஒரு மொழி மட்டும்  கொடுக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி முடிவுகளும் உண்டு.

ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த மொழி ஆராய்ச்சிகள் எல்லாம் ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்டு பெறப்பட்ட முடிவுகளாகும். அவர்களது  மொழி  லத்தீன்யை அடிப்படையாக கொண்டது. பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம் போன்ற மொழிகளில் அர்த்தங்கள் வேறுபட்டாலும் எழுப்பப்படும் ஒலி கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது. இதனால் குழந்தைகளை பொறுத்தவரையில் இத்தகைய மொழிகளை ஒரே நேரத்தில் கற்றுக்கொள்வது இலகுவாக இருந்தது. 

ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நிலைமை வேறு. நாம் பரவலாக பயன்படுத்தும் மொழிகளான தமிழ், ஆங்கிலம்  போன்றவைகள் வெவ்வேறு அடிப்படை மொழிகளிலிருந்து உருவாக்கப்பட்டது. அவை பிறப்பிக்கும் ஒலிகள் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபட்டது. இவை அனைத்தையும் ஒரு குழந்தையால் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே.

(விதிவிலக்காக சிங்களம், தமிழ் இரண்டும் ஒரே ஒலியை பிறப்பிக்கின்றது என்பதனால் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் கற்பிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.)



இந்த சூழ்நிலையில் இரண்டாவது மொழியை எப்போது சொல்லிக் கொடுக்கலாம்?

ஒவ்வொரு குழந்தைகளின் விருத்தி படிகளும் தனித்துவமானது. ஒரு மொழியை கற்றலுக்கான ஆயத்த நிலையும் குழந்தைக்கு குழந்தை வேறுபடும்.சரியாக இந்த வயதில்தான் குழந்தைக்கு வேற்று மொழியை கற்பிக்க வேண்டும் என சொல்ல முடியாது. 



கிட்டத்தட்ட ஆறு வயதில் எல்லா குழந்தைகளும் இரண்டாவது மொழியை கற்றுக்கொள்ள ஆயத்தமாகின்றார்கள் என்பது  ஒரு உளவியலாளரின் கருத்து. இது கவனித்து பேசுவதற்கான வயதெல்லை. எழுதுவது சம்பந்தப்பட்டதல்ல.

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 25th of January 2020.


No comments:

Post a Comment