Wednesday 29 January 2020

குழந்தைகளுக்கு மொழியை எவ்வாறு கற்றுக் கொடுக்கலாம்?


குழந்தைகளுக்கு மொழி கற்றுக்கொடுத்தல் என்பது பெற்றோர்களை பொறுத்த வரையில் பாரிய சவாலானது.  மொழி கற்றலின் என்றால் என்ன? அதன் படி முறை என்ன? என்பவற்றை சரியாக விளங்கிக் கொண்டால் அச்சவாலை முறியடிக்கலாம் என்பது எனது நம்பிக்கை.

கற்றுக்கொள்ள கூடிய மொழியை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

புரிந்துக்கொள்ளக்கூடிய மொழி (Receptive language)

  • கவனிக்கும் திறன் (Listening) 
  •  படிக்கும்/ வாசிக்கும்  திறன் (Reading)


பேசக்கூடிய மொழி (Expressive language)

  • பேசும் திறன் (Speaking) 
  • எழுதும் திறன் (Writing)


இந்த நான்கு திறனும் விருத்தி அடையும் போதே ஒரு குழந்தை ஒரு மொழியில்  முழுமையாக தேர்ச்சி அடைந்து உள்ளது என அர்த்தம்.

குழந்தைகளுக்கு முதலில் விருத்தி செய்ய வேண்டிய திறன் கவனித்து கேட்கும் திறன் ஆகும்.இதற்காக குழந்தை அந்த மொழியை கேட்பதற்கான வாய்ப்பை அதிகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். குழந்தை தொடர்ந்து தாய் மொழியை கேட்டுக்கொண்டு இருந்தால் இரண்டாவது மொழிக்கான வார்த்தைகள் பதிவாகாது. இதனால் அதில் சிந்தனை வளராது.


அதே நேரத்தில் குழந்தை இரண்டாவது மொழியை கேற்க ஆரம்பித்த உடன் கதைக்க ஆரம்பித்து விடும் எனவும் கூற முடியாது.

காரணம் குழந்தை ஒரு மொழியை கேட்க ஆரம்பித்த காலத்திலிருந்து கதைக்கும் வரை மூன்று  படி முறைகளை கடந்து செல்ல வேண்டும். அப்போதுதான் குழந்தையால் ஒரு மொழியில் முழுமையாக சிந்தித்து கதைக்க முடியும்.

அவதானித்து கேட்கும் நிலை


இதில் குழந்தை புது  வார்த்தைகளை மூளையில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது 3 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை நீடிக்கலாம்.இந்த phase யில்  குழந்தை இரண்டாவது மொழியை அதிகம் கேற்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

கேட்டவற்றை பேசி பார்க்கும் நிலை


இந்த phase யில் குழந்தை சின்ன சின்ன வார்த்தைகளை பேசிப் பார்க்கும். நாம் அதற்கு சரியான மறு  மொழி வழங்கும் போது பேசும்  வார்த்தைகளின் அளவு நீண்டுச்  செல்லும்.

மொழியை ஆராய்ச்சி செய்யும் நிலை

புது மொழியை கற்கும்போது குழந்தை இந்த phaseயில் ஏற்கனவே சரியாக கற்றவற்றை தவறாக பேசி பார்ப்பார்கள். இது அந்த குழந்தை மொழியை ஆராய்ச்சி செய்கின்றது என அர்த்தம். இதை நாம் அனுமதிக்க வேண்டும். இதன் போது மூளை ஒரு சில தவறுகளை தானே உருவாக்கி அதிலிருந்து புது விடயத்தை கற்றுக் கொள்கின்றது. 

'நீ  தப்பாக பேசுகிறாய் சரியாக பேசு' என குழந்தைகளை கட்டுப் படுத்தும் போது இந்த phaseயை நிறுத்தி விடுவர். இதனால் குறிப்பிட்ட மொழியில் பாண்டித்தியம் அடைய மாட்டார்கள். அத்தோடு குறிப்பிட்ட மொழியை தயங்கி தயங்கி பேச ஆரம்பிப்பார்கள்.

எனவே சரியாக  கதைத்துக் கொண்டு இருந்த ஒரு மொழியை குழந்தை தவறாக கதைத்தால்  குழந்தைகளை ஏசாமல் நாம் அந்த வார்த்தைகளை தொடர்ந்து சரியாக  கதைக்கும் போது குழந்தையும் சில நாற்களில் சரியாக கதைக்க ஆரம்பிக்கும்.

இந்த மூன்று பகுதியும் முறையாக குழந்தை அனுபவிக்கும் போதே  மொழி கற்றலில் பேச்சுத்திறன் சரியான விதத்தில் விருத்தி அடையும்.



இதற்கு பதிலாக ஒரு குழந்தையை story telling என்ற பெயரில் குறிப்பிட்ட மொழியில் ஒரு கதையை மனப்பாடம் இடச்செய்து அதனை கதைக்க வைக்கும் போது மனப்பாடம் செய்யும் திறன் வளருமே தவிர மொழிவளர்ச்சி ஒரு போதும் விருத்தி அடைய போவதில்லை. ஒரு குழந்தையின் மனப்பாடம் செய்யும்த்திறனை வைத்து பேச்சுத் திறனை எடை போட முடியாது.

மேலும் ஒரு மொழியில் பேச்சுத்திறன் விருத்தி அடைவதற்கு முன் வாசிப்பு திறனையோ எழுதும் திறனையோ அறிமுகப் படுத்துவது என்பது ஒரு குழந்தையின் மொழி வளர்ச்சியில் ஆரோக்கியமான விடயமல்ல.

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 29th of January 2020.







No comments:

Post a Comment