Saturday 1 February 2020

குழந்தைகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்தல் அவசியமா?


குழந்தைகளின் மொழிக் கற்றலில் கவனித்து பேசும் திறன் எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவு வாசிப்புத் திறனும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகளுக்கு வாசிப்புத்திறனை மேம்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

vமொழிக்கு உண்டான  சொற்களையும் அதற்கான ஒலிகளையும்  கற்றுக் கொள்கின்றதுஇதனால் எழுத்தறிவை (Litracy skill) வளர்கின்றது.
vபுத்தகங்களின் பெறுமதியை உணர்த்துகின்றது
vகற்பனை திறனை  வளர்கின்றது.
vசமூக வளர்ச்சியையும் தொடர்பாடல் திறனையும் வளர்கின்றது.
vஉண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்த்துகின்றது.


வாசிக்கும் திறனை அறிமுகப்படுத்துவதற்கான வயதெல்லை என்ன?

ஒவ்வொரு குழந்தைகளின் விருத்தியும் தனித்துவமானது. அதே போல குழந்தைகள் வாசிக்க கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் வயதெல்லையும் ஆளுக்காள் வேறுபடும்.

பொதுவாக மூன்று வயதில் குழந்தைகள் கதைகள் கேட்டு அதனை தொடர்ந்து கேட்கும்போது அவர்களுடைய மழலை மொழியில் அதனை திரும்பிச் சொல்வதற்கு  இயலுமானவர்களாக இருப்பார்கள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் புத்தகங்கள் தென்படும் போது அவற்றை புரட்டிப் பார்த்து ஆராய்ச்சி செய்வார்கள்.

நான்கு வயதை எட்டிய குழந்தைகள் மிகவும் பரீட்சியமான எழுத்துக்களை  இனங்கண்டு கொள்வார்கள்.உதாரணமாக தனது பெயர், காட்சி பலகைகளிலுள்ள சொற்கள் மற்றும் பொருட்களின் லேபெல்கள் போன்றவைகளை இனங்காண்வார்கள்.

ஏறத்தாள ஐந்து வயதில் எளிமையான சொற்களை வாசிக்கக் கூடியவர்களாகவும் சிலவேளை அவற்றை எழுதக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். 



குழந்தைகள் வாசிப்பதற்காக மூளையின் பல பகுதிகளை பயன்படுத்துகின்றனர்அப்பகுதிகள் குழந்தை பருவத்தில் சரியான விதத்தில் தூண்டபடுவதன் மூலமே எதிர்காலத்தில் சிறந்த வாசிப்பாளிகளை உருவாக்க முடியும்.



By ART OF PARENTING at 2nd of February 2020.

No comments:

Post a Comment