Thursday 6 February 2020

குழந்தைகளுக்கு வாசிப்புத்திறனை பிறப்பிலிருந்து மேம்படுத்தல் எவ்வாறு?


குழந்தைகள் வாசிப்பதற்காக மூளையின் பல பகுதிகளை பயன்படுத்துகின்றனர். அப்பகுதிகள் குழந்தை பருவத்தில் சரியான விதத்தில் தூண்டப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சிறந்த வாசிப்பாளிகளை உருவாக்க முடியும்.


குழந்தைகளுக்கு வாசிப்பு திறனை அறிமுகப்படுத்தமுன் விருத்தி செய்ய வேண்டிய மூன்று  திறன்கள் பின்வருமாறு

  1. புலன்களின்  விருத்தியை தூண்டுதல்
  2. தசைகளுக்குண்டான விருத்தியை தூண்டுதல்    
  3. மூளையில்  வித்தியாசத்திற்கும் ஒற்றுமைக்கும் இடையிலான  விருத்தியை ஏற்படுத்தல் 

புலன்களின்  விருத்தியை தூண்டுதல்

குழந்தை பருவத்தில் பார்வை, கேட்டல்,தொடுகை ,நுகர்ச்சி ,மற்றும் சுவை புலன்களை சரியான விதத்தில் தூண்டுவதன் மூலம் அவர்களது வாசிப்புத்திறன் பிற்காலத்தில் மெருகூட்டப் படுகின்றன என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

மூளையானது குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு வயதிலும் குறிப்பிட்ட புலன்களை வைத்து தனது நரம்பெண்களை விருத்தி செய்து கொள்கின்றது. இந்த விருத்தியானது பிற்காலத்தில் மொழி கற்றலுக்கான  அடிப்படையாக அமைகின்றது.

  • முதல் ஆறு மாதங்களில் குழந்தைகள் அதிகம் நாக்கையும் பின்னர் கைகளையும் பயன்படுத்துவார்கள். எனவே இந்த வயதில் குழந்தைகளுக்கு கைகளுக்கும் வாய்க்கும் நிறைய அனுபவம் கொடுக்க வேண்டும்.

  • பின்னர் பொருள்களை பிடித்து தட்டிப்பார்த்தல் அதன் மூலம் தாளத்தை உருவாக்கல் போன்ற விடயங்களில் ஈடுபடுவார்கள். Ex கரண்டியை பிடித்து மேசையில் அடித்தல்.

  • அதே போல மூளையில் மண நுகர்ச்சி கலங்களை தூண்டுவதற்காக  பல்வேறுபட்ட மணங்களை நுகர்வதற்கான வாய்ப்பை வழங்க  வேண்டும். Ex எலுமிச்சை பழம்  நுகர விடுதல்.

  • குழந்தை துப்பும் பழக்கத்தை விருத்தி செய்வதற்கு முன்னாள் (ஒன்பது மாதத்திற்கு முன்னாள்) எல்லா வகையான சுவையையும் அனுபவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். 

  • மேலும் நிறைய நமது குரல் கேட்கும் வாய்ப்பை வழங்குவதன் மூலம்  மூளையின் கேட்டல் பகுதியை விருத்தி செய்ய முடியும். 

இவையே மொழிக் கற்றலுக்கான அடிப்படை பயிற்சியாகும்.



தசைகளுக்குண்டான விருத்தியை தூண்டுதல்

குழந்தையின் விருத்தியை நோக்கும் போது கைகால்களிலுள்ள பெரிய தசைகள் விருத்தி அடைந்த பிற்பாடே சிறிய தசைகளான கண்ணுக்குண்டான தசைகள் விருத்தி அடைகின்றன. கண் தசைகள் விருத்தி அடைந்த பிறகே குழந்தை வாசிப்புக்கு தயாராகின்றது. எனவே வாசிப்புத்திறனை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன் கை  கால்களை பயன்படுத்தி நன்றாக தவள வாய்ப்பளிக்க வேண்டும். 

தவளாத குழந்தைகளுக்கு வாசிப்புத்திறன் தாமதமாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் நிரூபிக்கின்றன


 மூளையில்  வித்தியாசத்திற்கும் ஒற்றுமைக்கும் இடையிலான  விருத்தியை ஏற்படுத்தல் 

 குழந்தையின் புலன் விருத்தியையும் தசைகளுக்குண்டான விருத்தியையும் மேம்படுத்திய பிற்பாடு சின்ன சின்ன சமையல் பொருட்கள் இலைகள் போன்றவற்றை வழங்கி அவற்றை வேறுபிரிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இதன்போது குழந்தைகள் ஒரே மாதிரி பொருட்களை ஒன்று சேர்த்தல் இலைகளில் கூட வித்தியாசத்தை உணர்தல் போன்ற அனுபவங்களை பெற்றுக் கொள்கின்றனர். இது மூளை யில்  வித்தியாசத்திற்கும் ஒற்றுமைக்கும் இடையிலான வேறுபாட்டை விருத்தி செய்கின்றது. இதன் மூலம் பிற்காலத்தில் குழந்தைகள் எழுத்துக்கு இடையிலான வித்தியாசத்தை இனங்கண்டு கொள்வார்கள்.

உதாரணமாக ''B'' யிற்கும் ''D'' இடையிலான வித்தியாசம் மற்றும் ''க'' யிற்கும் ''ச'' இடையிலான வித்தியாசம். 


By ART OF PARENTING at 6th of February 2020.
  


No comments:

Post a Comment