Saturday 7 March 2020

உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட மறுக்கின்றதா?


கூட்டுக்குடும்பங்கள் அரிதாக்கிக் கொண்டு  செல்வதும் பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதானாலும் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பை இன்றைய நவீன சிறுவர்கள் இழந்து விடுகின்றனர்.



குழந்தை சேர்ந்து விளையாட வேண்டும் என்றால் முதலில் சேர்ந்து விளையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். இரண்டாவது விளையாட்டுக்கான நான்கு படிமுறைகளையும் குழந்தை தாண்டிச்செல்ல வேண்டும்.

விளையாட்டுக்கான நான்கு படிமுறைகள் என்ன?


Solitary Play

ஒரு குழந்தை புதிய நண்பர்களுடன் சேரும்போது  முதலில் தனிமையிலேயே தனக்கு பிடித்தமான பொருட்களுடன் விளையாடுவார்கள். இது மூன்று மாதங்கள் வரை நீடிக்கலாம். சரியான வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டால் ஆறு மாதங்கள் வரை நீடிக்க முடியும்.



Parallel Play

 இங்கு குழந்தைகள் ஒன்றாக உட்கார்ந்து தனியாக தங்களுடைய விளையாட்டை விளையாடுவார்கள். வெளியே இருந்து பார்க்கும் போது ஒன்றாக விளையாடுவது போல தோன்றும். ஆனால் நிஜம் அதுவல்ல. இது சில வாரம் தொடக்கம் ஒரு மாதம் வரை நீடிக்கலாம்.



Associated Play 

குழந்தைகளுக்கு இடையில் பொருட்கள் செயற்பாடுகள் பரிமாற்றம் நடைபெறும். இங்கும் சேர்ந்து விளையாட மாட்டார்கள். தனிமையில்தான் இருப்பார்கள்.



Co operative Play

இறுதியில் நிஜ விளையாட்டுக்குள் செல்வார்கள். தான் வாய்ப்பை பெற்றுக்கொள்ளல் மற்றவர்களுக்கு கொடுத்தல். விளையாட்டில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அவை பின்பற்றப் படுதல் எல்லாம் நடைபெறும்.


சிறுவயதில்  தமது உறவுகளில் இந்த படிகளை தாண்டி விளையாட்டை முழுமையாக அனுபவிக்கும் குழந்தைகளே எதிர்காலத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் வேலைத்தளத்தில் சிறந்த உறவுகளை பேணுவத்துடன் பிரச்சினைகள் என்று வரும்போது அவற்றை சிறந்த முறையில் கையாளவும் ஆற்றல் பெறுகின்றனர்.

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 7th of March 2020.

No comments:

Post a Comment