Tuesday 19 May 2020

குழந்தைகளுக்கு அல் குர்ஆனை எவ்வாறு கற்றுக்கொடுக்கலாம்?




உங்களில் சிறந்தவர் அல் குர்ஆனை தானும் கற்று மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பவரே என்பது நபிமொழியாகும்(புகாரி).  இதனால்தான்  அல் குர்ஆனிய குழந்தைகளை உருவாக்குவது என்பது அநேக பெற்றோர்களின் கனவாக உள்ளது. இந்த கனவை நனவாக்கிக் காட்டிய, முழு குர்ஆனையும் ஏழு வயதிற்குள் மனப்பாடம் செய்த இரண்டு குழந்தைகளின் தாயான Sister Shabnam அவர்கள் தனது வாழ்க்கை பதிவேட்டை நமக்கு ஆலோசனையாக வழங்குகின்றார்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக அல் குர்ஆனை  கற்றுக்கொள்ளல் 

அல் குர்ஆனை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால் நீங்கள் அதனை முதலில் கற்றுக்கொள்ளுங்கள் என்பது அவரது முதல் ஆலோசனையாகும். நாம் எதனை குழந்தைகளிடம் எதிர்பார்க்கின்றோமோ அதனை முன்மாதிரியாக நின்று அவர்களுக்கு செய்து காட்டுவதே இருப்பதிலேயே சிறந்த வழிமுறையாகும். எனவே தப்ஸீர் தஜ்வீத் கலையை கற்றுக்கொள்ளல் மற்றும் நாமும் குர்ஆனை மனப்பாடம் இடும் பயணத்தில் இணைந்து கொள்ளல் அவசியமாகும்.



குழந்தைகள் அல் குர்ஆனை கற்றுக்கொள்ளும் முறையை புரிந்துக்கொள்ளல்

குழந்தைகள் ஒரு விடயத்தை மூன்று வகையான விதத்தில் புரிந்துகொள்கின்றனர். 

Aural learners

இவர்கள் ஒரு விடயத்தை கேட்டல் புலன் மூலம் புரிந்துக்கொள்பவர்கள். இவர்கள் மற்ற முறைகளை பயன்படுத்துபவர்களை விட சிறப்பானவர்கள். காரணம் எந்த ஒரு முயற்சியுமின்றி வெறும் கேள்விப்புலன் மூலம் கற்றுக்கொள்கின்றனர். இவர்கள் விளையாடும் போது அல்லது வரைதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் போது குர்ஆனிய வசனங்களை கேட்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கலாம். மேலும் நாம் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கலாம். இதன் மூலம் இலகுவில் குர்ஆனை கற்று மனப்பாடம் செய்வர்.  

Visual learners

ஒரு விடயத்தை பார்ப்பதன் மூலம் கற்றுக் கொள்பவர்கள். குர்ஆன் ஆயத்தை விரல்களினால் சுட்டிக்காட்டி ஓதிக் காண்பிப்பதன் மூலம் மனப்பாடம்  செய்ய அனுமதிக்கலாம்.பெரிய குழந்தைகளை பொறுத்தவரையில் மனப்பாடம்   செய்யும் வசனத்தை அவர்களது  கைகளினாலேயே எழுதுவதன் மூலம் கற்றுகொள்ளச் செய்யலாம். ஒரே குர்ஆனை மனப்பாடம் செய்யும் முழுப் பயணத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் காட்சி (Picture memory) ஒன்றை அதில் உருவாக்கி மனப்பாடம் செய்வார்கள். அழகிய உறைகளை இட்டு அவர்களுக்கு வழங்கும் போது  குர் ஆனுடனான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும்.

Kinesthetic learners

ஐந்து வயதிற்கு குறைவான சிறிய குழந்தைகள் பொதுவாக புது விடயங்களை புரிந்துக்கொள்ள  இந்த முறையையே கையாள்கின்றனர். அதாவது கைகளை பயன்படுத்தி விளையாடுவதன் மூலம், அனுபவங்களின் மூலமும், உருவமைக்கப்பட்ட சிறு விளையாட்டுப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் புரிதலை மேற்கொள்கின்றனர்.

உடற்பாகங்களின் அசைவுகள் மூலம் முகப்பவனைகள், சைகைகள் மூலம் இவர்கள் அல் குர்ஆனை கற்றுக்கொள்கின்றனர். 

உதாரணமாக திருப்தி என்பதற்கு பெரு விரலை உயர்த்தி காட்டுதல். வேண்டாம் /இல்லை என்பதற்கு சுட்டு விரலை அசைத்துக் காட்டுதல் போன்றவையை  பயன்படுத்துவதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.



அல் குர்ஆனை குறைந்த வயதெல்லையில் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தல்.

ஒவ்வொரு  குழந்தையின் ஆற்றலும் தனித்துவமானது. ஒரு குழந்தையின் ஆற்றலை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிட முடியாது. சில குழந்தைகள் ஆரம்ப வயதெல்லையில் கதைக்க ஆரம்பித்து விடுவார்கள். சிலருக்கு அவ்வயதெல்லை பின்னோக்கிச் செல்லும். குழந்தைகளின் ஆற்றல் மற்றும் நமது முயற்சி என்பவற்றை பொறுத்து அல் குர் ஆனை 2-10 வயதெல்லைக்குள் முழுமையாக மனனமிடச் செய்யலாம் என்பது ஆசிரியரின் கருத்தாகும்.

அதே நேரத்தில் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற வகையில் எதிர்பார்ப்பது அவசியமாகும். குழந்தை எந்த வயதை அடைந்திருந்தாலும் மனனம் செய்வதற்கு உற்சாகப்படுத்தலாம். இதற்கு வயதெல்லை என்று ஒன்று கிடையாது. 80 வயது மூதாட்டியும் குர் ஆனை மனனமிட்ட வரலாறுகள் உள்ளன.

அவரது குழந்தை 5 வயதில்  Qa’eda stage  ஆரம்பித்ததாகவும் இதன்போது juz amma வில் சிறிய சூராக்களை மனனமிட ஆரம்பித்ததாகவும் குறிப்பிடுகின்றார். பின்னர்  வெறும் இரண்டு மாதங்களில் வெளித் தூண்டுதல் எதுவுமின்றி juz amma வின் எல்லா சூராக்களையும் மனனமிட்டது. இந்த கட்டத்தில் தான் முன்னின்று அல் குர்ஆனை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்ததாக குறிப்பிடுகின்றார். எனவே அவர் வீட்டில் அல் குர் ஆனை கற்றுக் கொடுக்கவும் hifdh பண்ணவும் உதவ ஆரம்பித்தார். மேலும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை ஏற்பாடுசெய்து குழந்தையின் tajweed மற்றும் makhaarij என்பவற்றை செம்மைப்படுத்தியதாக குறிப்பிடுகின்றார்.  


குழந்தைகளுடன் பெற்றோர்களும் இணைந்து செயற்படல்

''குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான இணைப்பை விட பெற்றோர்களுக்கு இடையிலான இணைப்பு பலமானது. எனவே ஒரு பிரபலமான மதுராசாவில் குழந்தையை சேர்த்தவுடன் அவர் hafidh ஆகி விடுவார் என்று கிடையாது. மாறாக வீட்டில் நாம் வழங்கும் முயற்சி அத்தியாவசியமானது.  ஆகவே நான் ஒவ்வொரு நாளும் 10-15 நிமிடங்கள் குழந்தையுடன் அமர்ந்து அன்று மதுராசாவில்  கற்ற பாடத்தை குழந்தையுடன் சேர்ந்து சரி பார்ப்பேன். மேலும்  வீட்டில் கற்றார் என்பதை சுட்டிக்காட்டி அந்த பக்கத்தின் மூலையில் அடையாளம் இடுவதோடு அதனை சரி பார்க்குமாறு ஆசிரியருக்கும் ஒரு குறிப்பு எழுதுவேன்'' என்கிறார் ஆசிரியர்.


கற்றவற்றை இயன்றளவு மீள் பரீட்சித்தல்

''நான் ஒரு ஆயத்தை ஓதிக் காண்பிக்கும் போது அதனை குழந்தை திரும்பிச் சொல்லும். இவ்வாறு குறைந்தது 7 முறை மீண்டும் மீண்டும் மீள் பரீட்சிப்போம். இது நீண்ட காலம் ஞாபகத்தில் வைத்திருக்க சாத்தியமாக இருந்தது. பிறகு குறிப்பிட்ட பக்கத்தை மறைத்துக் கொண்டு ஏறத்தாழ 5 தடவை திரும்பிச் சொல்லுமாறு வேண்டினேன். இவ்வாறு  ஆரம்பித்த அல் குர்ஆனுடனான பயணத்தில் நாளுக்கு நாள் முன்னேற்றத்தை என்னால் காண முடிந்தது

மேலும் நீண்ட ஆயத்துக்களை சிறு சிறு பகுதிகளாக பிரித்து மனனமிட்டோம். எமது நேரத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியை ஏற்கனவே மனமிட்ட ஆயத்துக்களை ஞாபகப்படுத்துவதற்காகவும் மற்றைய பகுதியை புதிய ஆயத்துக்களை ஞாபகப்படுத்துவதற்காகவும் பயன் படுத்தினோம். இதற்காக ஒரு நாளின் 15- 30 நிமிடங்களை செலவழித்தோம்.

எந்த முறையை பயன்படுத்தி குழந்தை கற்றாலும் ஒவ்வொரு நாளும் இரவில்  படுக்கைக்கு செல்லும் முன் திரும்பி ஒரு முறை ஞாபகப்படுத்துவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தோம்.'' என்கிறார் ஆசிரியர்.


தொடரும்......  
www.drsanoosiya.blogspot.com.
19.05.2020

No comments:

Post a Comment