Friday 17 January 2020

உங்கள் குழந்தை நல்லவரா? கெட்டவரா?


ஒரு குழந்தை ஒரு விடயத்தை செய்யும் போது '' நல்ல பிள்ளை'' அல்லது ''கெட்ட பிள்ளை'' என அழைப்பது  குழந்தை வளர்ப்பில் அதிகம் காணக்கூடிய ஒன்று.  நாங்கள் விரும்பாத ஒன்றை குழந்தை செய்யும் போது நாம் கவலைப்படலாம். அதற்காக குழந்தையை நீ கெட்டவர் என அடையாளப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்.

உதாரணமாக ஒரு குழந்தை புதிதாக பூசப்பட்ட சுவரில் கீறும் போது அது உங்களுக்கு விருப்பம் இல்லாத செயலாக இருக்கலாம். அதை குழந்தை திரும்பச் செய்வதும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமல்ல என்பதனை விளக்கப்படுத்த விரும்பலாம். அதற்காக குழந்தையை கெட்ட பிள்ளை என அழைப்பது எவ்விதத்தில் நியாயம்.
நாம்  ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் எப்போதும் நல்லவர்கள் அவர்களது செயல்கள் அல்லது பழக்க வழக்கங்கள் சில போது கெட்டவையாக இருக்கலாம்.



ஒழுக்கத்தின் நோக்கம் குழந்தைகளின் நடத்தையை சீராக்குவதே. மாறாக அவர்களை ‘’கெட்டவர்கள்’’ என அடையாளப்படுத்தி அவர்களது சுயமதிப்பை காயப்படுத்துவதல்ல.



எப்போதும் குழந்தைகளின் நடத்தைகளை, அவர்களிடமிருந்து வேறுபடுத்தி வையுங்கள். குழந்தைகள் எப்போதும் நல்லவர்கள். அவர்களது நடத்தைகள் நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம்என்பதனை வலியுறுத்துங்கள். அவர்களது உள்ளார்ந்த பாத்திரத்தை இதற்குள் கொண்டுவராதீர்கள். ஒழுக்கத்தின் நோக்கம் நடத்தையை சீர்படுத்துவதே குழந்தைகளை அல்ல.

குழந்தைகளிடம் கூறுங்கள். ‘’நீங்கள் நல்லவர்கள். ஆனால் உங்களின் நடத்தை இன்று  நல்லதாக இல்லை. அவை எதிர்காலத்தில் சரியாகும் என எண்ணுகின்றேன் ‘’ என்று.


இது அவர்களது சுயமதிப்பை கூட்டி, 'நமது பெற்றோர்கள் நாம் என்ன செய்தாலும் நம்முடன் நின்று நம்மை சரியான விதத்தில் வழிநடத்துவார்கள்' என்ற எண்ணத்தை விதைக்கும்.



By ART OF PARENTING at 18th of January 202O


No comments:

Post a Comment