Wednesday 11 March 2020

வயதிற்கு ஏற்றவகையில் விளையாட்டை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது எவ்வாறு?


2-7 வயது

இந்த வயது குழந்தைகளுக்கு Rules பின்பற்ற தெரியாது. தோல்வி வெற்றி என்ன என்பதனை அறியமாட்டார்கள். 
குறிப்பாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் Luck & gambling சம்பந்தப்பட்ட விளையாட்டுக்களை புரிந்துகொள்ளமாட்டார்கள். உதாரணமாக Ludo & Snakes and ladder போன்ற விளையாட்டுக்களில் தோல்வியுறும் போது அது அதிஷ்டத்தால் ஏற்பட்டது என்பதனை புரிந்துகொள்ள மாட்டார்கள். இது நியாயமற்ற செயல் என்றே உணர்வார்கள்.

குழந்தைகள் எப்போதும் பெற்றோர்களை அவர்களின் சுற்றத்தார்களை  பிழை செய்யமாட்டார்கள் என்றே எண்ணுகின்றார்கள். இவ்வாறான விளையாட்டுக்களில் பெற்றோர்கள் அவர்களுடன் இணைந்து விளையாடும் போது பெற்றோர்கள் தன்னை ஏமாற்றுகின்றார்கள் என்ற யூகத்தை தோற்றுவிக்கும். 

கற்பனை விளையாட்டுக்கள் அவர்களிடம் நிறைய இருக்கும். எந்த அனுபவத்தை நிஜத்தில் பெறுகிறார்களோ அதனை விளையாட்டாக  மாற்றுவார்கள். உதாரணமாக குழந்தை காய்ச்சல் காரணமாக வைத்தியசாலை சென்றுவந்திருந்தால் டாக்டர் டாக்டர் விளையாட்டு விளையாடும். கிட்டத்தட்ட ஒரு கிழமை வரை இந்த விளையாட்டு நீடிக்கும். இதன் மூலம் உலகத்தில் பல விடயங்கள் நடைபெறுகின்றது எல்லாம் சாத்தியமானது என்பதனை புரிந்துகொள்கின்றனர்


8-12 வயது

இவர்களால் Rules பின்பற்ற முடியும். தனக்கு ஒரு வாய்ப்பு வரும். பின்னர் அந்த வாய்ப்பு இன்னொருவருக்கு செல்லும்.  இதன் மூலம் ஒரு சமயம் நாம் தோற்போம் இன்னொரு சமயம் வெல்லுவோம். தோற்கும் போது இன்னொரு வாய்ப்பை பெற்று அதனை வெற்றியாக மாற்ற முடியும் என்ற வாழ்க்கையின் முக்கியமான உண்மையை குழந்தைகள் புரிந்துகொள்கின்றனர். 

ஒரு விளையாட்டு சலிப்பு தட்டும் போது அதன் விதிமுறைகளை மாற்றி இன்னொரு விளையாட்டாக மாற்றி விளையாடுவர். இதன் மூலம் புதிய அனுபவங்களினூடாக கற்றுக்கொள்ள மூளை ஆயத்தமாகின்றது என அர்த்தமாகும்.



13 வயதிற்கு மேற்பட்டவர்கள்

இந்த வயது குழந்தைகளினது விளையாட்டு சமூகம் சார்ந்த விளையாட்டாக இருக்கும். இவர்கள் விளையாட்டுப் பொருட்கள் பயன்படுத்துவது குறைவு. சின்ன சின்ன குழுக்களாக இணைந்து பேச்சு விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள். உதாரணமாக உலக பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு அதனை தீர்ப்பதற்கு முனைதல், மரம் நட்டுதல், அநீதிக்கு எதிராக போராடல் போன்றவை. அவர்களது கருத்துக்கள் சரியாக இருந்தால் அவர்களுக்கு உதவுவதில் தப்பில்லை.



www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 11th of March 2020

No comments:

Post a Comment