Sunday 15 March 2020

COVID-19 குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?


உலகை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் COVID-19ஆல் எமக்கு ஏற்பட்ட உடலியல் தாக்கங்களைவிட மனரீதியான தாக்கங்களே அதிகமாக உள்ளது. இதனால் எமது கண்காணிப்பில் உள்ள குழந்தைகளும் மறைமுகமாக பாதிக்கப்படுவதை யாராலும் மறுக்க முடியாது.




COVID-19 போராட நாமும் தயார் என்பதற்கு நம்பிக்கையூட்டும் தகவல்கள்

  • மருத்துவ வளர்ச்சியின் உச்ச காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அதற்கான சான்றுகள் 

  1. நோய்க்கு  காரணமான வைரஸ் மற்றும் அதற்கான மரபணுத்தொடரும் வெகு விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது.
  2. நோய் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகளும் (Testing) விரைவில் உருவாக்கப்பட்டன.
  3. நோய்க்கான மருந்து மற்றும் தடுப்பு மருந்துகள் (Vaccine) கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் முன்னேற்றப்பாதையில் சென்றுக்கொண்டு உள்ளன.

  • China Whuhan மாநிலத்தில்தோற்றுவிக்கப்பட்ட இந்த நோயானது பாரிய அழிவை அந்நாட்டில் ஏற்படுத்தினாலும் அரசின் உடனடி நடவடிக்கைகளின் காரணமாக நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நாளுக்குநாள் நோயினால் பாதிக்கப்பட்டோரின் தொகை குறைந்து கொண்டு செல்கின்றது
  • குழந்தைகள் தொற்றுக்குள்ளானது இதுவரை <3 சதவீதமாகவே உள்ளது அவர்களுக்கு ஏற்பட்ட வீரியத்தன்மையும் குறைவே.
  • WHOஆல் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு முறைகள் இலகுவில் எல்லோராலும் பின்பற்றக்கூடிய ஒன்றாக உள்ளது
  1.  அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளுதல். 
  2. இருமல் தும்மலின்  போது முறையான பாதுகாப்பு முறைகளை பேணுதல். 
  3. தரைகளை சுத்தமாக வைத்திருத்தல். 

COVID-19 பற்றி குழந்தைகளுக்கு எவ்வாறு எடுத்துக்கூறலாம்?

  • வயதிற்கு ஏற்ற வகையில் நோய் பற்றிய சரியான தகவல்களை குழந்தைகளுக்கு வழங்கல்.

 Ex :- ''உலகில்  தடுமல் காய்ச்சல் போன்ற ஒரு வகையான வைரல் நோய்  பரவிக்கொண்டு உள்ளது. இந்த நோய்க்கு ஆளாகிய எத்தனையோ பேர் முறையான சிகிச்சை பெற்று பூரணமாக குணமாகியுள்ளனர். இந்த நோய் எமக்கு ஏற்பட்டால் எமக்கு உதவுவதற்கு வைத்தியர்களும் தாதியர்களும் தயாராக உள்ளனர்.''

  • இப்போது நாம் இந்த நோயிலிருந்து பாதுகாப்பாகவே உள்ளோம். அச்சப்பட தேவை இல்லை எனக் கூறுதல்.

  • சரியான தடுப்பு முறைகளை பயன்படுத்துவோமாயின் இந்நோயிலிருந்து எம்மை முற்றாக பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தல்.

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 15th of March 2020.

No comments:

Post a Comment