Monday 4 May 2020

குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பது எவ்வாறு?





'புத்தகம் படிப்பது படிப்பில்லை. உங்கள் குழந்தைகளின் உள்ளிலுள்ள திறமைகளை வெளிக்கொணர்வதே உண்மையான கல்வி' என்றார் சுவாமி விவேகானந்தர்.


தனது குழந்தையின் திறமையை இனங்கண்டு அதனை எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான
நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற ஆர்வம் இன்றைய  பெற்றோர்களிடம் இருந்தாலும் எல்லா குழந்தைகளினதும் தனித்துவமான திறமைகள் இலகுவில் இணங்காணப்படுவதில்லை. தனால் தனது குழந்தைகளுக்கு எந்த ஒரு திறமைகளும் இல்லையோ என அநேகமான பெற்றோர்கள் அதிருப்தியடைகின்றனர். 

இறைவனால் படைக்கப் பட்ட ஒவ்வொரு மனிதனின் திறமையும் தனித்துவமானது.ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட முடியாது. 1983களில் வாழ்ந்த உளவியலாளர் Haward Gardener Multiple intelligent concept யை எமக்கு விட்டுச்சென்றார். அவர் கூறுவது என்னவென்றால் 

''அறிவு என்பது ஒன்பது வகையானது.  Naturalistic, musical, Logical, Interpersonal, Existential, Bodily kinaesthetic, Linguistic, Intra personal, Spatial Intelligent என அவற்றை வகைப்படுத்துகின்றார். நீங்கள் ஒன்பது வகைக்கும் வாய்ப்பை உங்கள்குழந்தைகளுக்கு கொடுத்தால்எந்த intelligent  அவர்களிடம் பலம் வாய்ந்ததாக உள்ளதோ அது மிகவும் பலம் வாய்ந்ததாக விருத்தி அடையும். எந்த intelligent சாதாரணமாக அல்லது பலவீனமாக உள்ளதோ அதனையும் விருத்தி அடையச்செய்யலாம். ஆனால்  அதில் நிபுணத்துவம் அடைய முடியாது'' என்று.



ஆனால் சில நேரங்களில் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் நமது குழந்தைகளின் திறமைகளை இணங்காண முடிவதில்லை. இவ்வாறு  குழந்தையின் திறமையை உங்களால் இணங்காண முடியவில்லை என்றால் அவர்களது பலத்தை புரிந்து கொள்ள முயற்சியுங்கள் என்கின்றது உளவியல்.


திறமை என்பது செயல் திறன் சார்ந்தது அதனை ஏதாவது ஒரு விதத்தில் குழந்தையிடம் உங்களால் பார்க்க முடியும். ஆனால் பலம் என்பது ஒருவரது குணாதிசயம்.அதனை நீங்கள் 
கூர்ந்து கவனிக்கும் போதே புரிந்துகொள்ள முடியும். அது கண்ணுக்கு புலப்படக் கூடிய ஒன்றல்ல.

Researcher Lea Waters குழந்தைகளிடம் இணங்காணக்கூடிய பலத்தை பின்வரும் பிரதான குழுக்களாக பிரிக்கின்றார்
  1. Courage- தைரியம் 
  2. Humanity- மனிதநேயம் 
  3. Wisdom- ஞானம் 
  4. Sense of Justice- நீதி 
  5. Self control- சுய கட்டுப்பாடு 
  6. Ability to look beyond yourself- தனது சக்திக்கு அப்பாலான நோக்கு


உதாரணமாக அலி பாபா நிறுவனத்தின் தலைவர் Jack Ma விடம் இருந்த தைரியமே அவரை ஒரு வெற்றிபெற்ற Business manஆக்கியது. காந்தியை மஹாத்மாவாக்கியது அவரிடம் காணப்பட்ட நீதியை பேணும் சமத்துவ உணர்வே. இவர்களிடம் திறமைகள் இருந்தாலும் அது மெருகூட்டப்பட்டது அவர்களிடம் காணப்பட்ட இவ்வகையான தனித்துவமான குணாதிசயங்களே. 

உங்கள் குழந்தை சண்டை என்று வரும்போது அதனை தவிர்ந்துக் கொள்வதை விருப்புகின்றாரா? அப்போது உங்கள் குழந்தை பலவீனமானவர், கோழை என்று அர்த்தம் இல்லை. தேவையற்ற மோதல்களினால் எமது பொன்னான நேரமும் சக்தியும் வீணடிக்கப்படுகின்றது  என்று அதனை தவிர்க்கக் கூடிய ஞானமிக்கவர் என இவர்களை கூறலாம்.  இவர்கள் குழு செயற்பாடுகளில் இணங்கி நடக்கக்  கூடிய  சிறந்த தலைவர்களாக உருவெடுப்பார்கள். 

திறமையை வளர்ப்பதில் பெற்றோர்களாகிய நமது பங்களிப்பு என்ன?


1.திறமையை கண்டறிய வாய்ப்புக்களை வழங்கல்

திறமைகள் என்பது மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றாலும் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர வேண்டுமென்றால் சரியான வெளிச்சூழலை உருவாக்கும்போதே அது சாத்தியமாகும். என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

செய்வதற்கு ஒரு வேலை இல்லாத போது போகுவதற்கு ஒருஇடமில்லாத போது குழந்தைகள்  தமக்கு விருப்பமானதை செய்ய ஆரம்பிக்கும். எனவே குழந்தைகளை சலிப்புத்தட்ட விடும் போது (Boredom) இது சாத்தியமாகின்றது. மேலும் மூன்று மூன்று மாதங்கள் திறமைகளை வெளிக்கொணரும்  classகளுக்கு (Sports, drawing...) அவர்களது ஆர்வத்தை புரிந்துக்கொள்ள முடியும்.  இது சில உளவியலாளர்களின் கருத்து,

2.குழந்தைகளின் ஆர்வத்தை கூர்ந்து அவதானித்தல்

குழந்தையின் ஆர்வத்தை நீங்கள் புரிந்துக் கொள்ளும் போது அதனை நாம் விரும்புகின்றோம் என்பதை வார்த்தை மூலமாகமாகவோ செயல்கள் மூலமாகவோ வெளிக்காட்டி உற்சாகப்  படுத்தலாம். இதன்போது குழந்தை மீண்டும் மீண்டும் அதனை செய்ய முயற்சிக்கும்.

3.தனது குறிக்கோளை நோக்கி தொடர்ச்சியாக பயணிக்க உற்சாகத்தை ஏற்படுத்தல்

குழந்தை குறிப்பிட்ட துறையில் முயற்சி செய்யும்போது சோர்வை உணரலாம்.  தோல்விகளை எதிர்கொள்ளும்போது அதனை கைவிட முயற்சிக்கலாம். இதன் பொது தனது குறிக்கோளை நோக்கி தொடர்ச்சியாக பயணிக்க உற்சாகத்தை ஏற்படுத்தல். 

4.முறையான பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

குறிப்பிட்ட திறனில் கணிசமான நிபுணத்துவத்தை குழந்தை அடைந்ததன்பிறகு முறையான பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான வழிகளை (online or offline resources) ஏற்படுத்திக் கொடுத்தல்.

5.கற்றல் செயற்பாட்டில் ஆதிக்கத்தியோ அழுத்தத்தையோ வழங்காமல் அவர்களை பின்தொடர்தல்

குழந்தை தானாக திறனை கற்றுக்கொள்ளும் நிலையை அடைந்தவுடன் எமது பங்களிப்பை குழந்தை வேண்டும்போது மாத்திரம் வழங்கி விட்டு அவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஆதிக்கத்தியோ அழுத்தத்தையோ வழங்காமல் பின்தொடர்தல்





No comments:

Post a Comment