Tuesday 28 April 2020

குழந்தைகளுக்கு தினசரி வேலைகளை அறிமுகப்படுத்தல்


குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வீட்டு வேலைகளை அவர்களின் வயதிற்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தல் என்பது மனரீதியான பல நன்மைகளை ஏற்படுத்துகின்றது என உளவியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால்தான் ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் பாடசாலைகளில் தமது வகுப்பறையை ஏன் மலசலக் கூடங்களை கூட தாமே சுத்தப்படுத்த கற்றுக்கொடுக்கப்படுகின்றது. இதன்மூலம் பல நன்மைகளை குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர்.


குழந்தைகளுக்கு தினசரி வேலைகளை பழக்குவதனால் ஏற்படும் நன்மைகள்


  • வீட்டிலுள்ள பொருட்கள் என்னுடையது இதனை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
  • கூர்ந்து கவனிக்கும் திறன்  விருத்தி அடைகின்றது. 

உதாரணமாக தூசு தட்டும் போது முதலில் புத்தகங்களை எடுத்து வைத்தல் பின் தூசி தட்டுதல் பின்பொருட்களை இருந்த இடத்தில் எடுத்து வைத்தல் போன்று தொடராக ஞாபகப்படுத்தி விடயங்களை செய்ய பழகுகின்றனர்.இது பிற்காலத்தில் கற்றல் நடவடிக்கைகளிலும் ஒரு தொடராகவுடன் கற்றலை  மேற்கொள்ள ஏதுவாகின்றது.
  • இரண்டு கைகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் போது மூளையின் இரண்டு பகுதிகளுக்கும் உண்டான திறமைகள் விருத்தி அடைய ஏதுவாகின்றது.


வயதிற்கு ஏற்ற வகையில் குழந்தைகளுக்கு வேலைகளை வழங்கும் போதே அது வினைத்திறனாக அமையும். குழந்தை உளவியலாளர் ஒருவர்  வயதிற்கு ஏற்ற வகையில் எவ்வாறு வழங்கலாம் என பின்வருமாறு விபரிக்கின்றார்.

1- 3 YEARS

ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பொறுத்த வரையில் சின்ன சின்ன வேலைகளை  ஏவுவதால் மாத்திரம் அவர்கள் குறிப்பிட்ட வேலையை செய்துவிடமாட்டார்கள்.  அவர்களுடன் நாமும் இணைந்து ஒரு விளையாட்டாக செயற்படும்போது உற்சாகமாக செயற்படுவார்கள்.

  • சாப்பிட்ட பிறகு குழந்தையின் கைகளில் Plateயை வழங்கி 'வாங்க நாம் kitchenயில்  வைப்போம்' எனக்கூறல் அவர்கள் அதனை செய்யும்போது good என கைதட்டல்.
  • கழுவிய பாத்திரங்களை குழந்தைகளின் உதவியுடன் அடுக்குதல். 
சமயலறை பாத்திரங்களின் ஒலிகளை உணர்ந்துகொள்வதன் மூலம் மொழி வளர்ச்சிற்கு உதவுகின்றது.
  • உறவினர்களின் உடைகளை அவர்களின் உதவியுடன் அப்பாவின் அம்மாவின் தம்பியினது என கூறி கூறி தரம்பிரித்து அடுக்குதல். இதன் போது குழந்தை ஒரு பொருள் எங்கு பொருந்தும் (Categorization) என்பதனை புரிந்து கொள்வதோடு இது பிற்காலத்தில் எழுத்துக்களை இலக்கங்களைமற்றும்  நிறங்களை பிரித்தறிவதற்கான அடிப்படையை வழங்குகின்றது.அப்பாவின் உடைகள் பெரியது தம்பியின் உடைகள் சிறியது போன்ற கணிதத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளும்.

2-2 1/2 வயது 
  • விளையாடி முடித்த பிறகு விளையாட்டுப் பொருட்களை ஒரு பெட்டியில் எடுத்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தல்.நாமும் சேர்ந்து ஒரு விளையாட்டாக செய்து காட்டல்.இதன் மூலம் எடுத்த பொருட்களை இருந்த இடத்தில் வைக்க வேண்டுமென்ற தகவல் மூளையில் பதியும். பாதணிகளை பாவித்த உடைகளை உரிய இடத்தில் போட வைத்தல்.

3-5 YEARS 

இது குழந்தைகள் பாடசாலை போன்ற வெளி இடங்களுக்கு சென்று வரும் பருவமாகும்பாதணிகள் புத்தகப்பை போன்றவற்றை பாடசாலை விட்டு வந்த உடன் உரிய இடத்தில் வைக்க சொல்லிக்கொடுத்தல்.

4 வயது - socks கைக்குட்டை போன்ற சிறிய உடைகளை கழுவுவதற்கு வாய்ப்பளிக்கலாம்.நாம் அதிகம் அழுக்காக்கி கொண்டு வரும்போது அவற்றைஅழுக்கு நீக்க அதிகம் சிரத்தை எடுக்க வேண்டும் என்பதனை அவர்கள் ஆரம்பத்திலிருந்து புரிந்து கொள்வார்கள்.

4-5 வயது- வீட்டிலுள்ள செல்ல பிராணிகளுக்கு உணவூட்டல், மீன்களுக்கு தீனி போடுதல், செடிகளுக்கு நீர் பாய்ச்சல் போன்றவைக்கு வாய்ப்பளிக்கலாம். இதன்மூலம் உயிரினங்கள் உயிர் வாழ உணவு நீர் அவசியம் என்பதனை புரிந்து கொள்கின்றனர்.


>5 YEARS 

நெருப்புடன் சம்பத்தப்படாத சமையல் (Fire less cooking) செய்ய பழக்கலாம்.  juice கரைத்தல் சீனி நீர் எவ்வளவு போட வேண்டும்  என்பதனை சொல்லிக்கொடுக்கலாம். Bread இற்கு  butter jam தடவுதல், ரொட்டி மாவு உருட்டுதல், Snack box pack பண்ணல் சொல்லி கொடுக்கலாம். சமையல் குழந்தைகளின் மூளை விருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் சமையலை கற்றுக் கொள்ளும் குழந்தை தான் செய்ததால் அதனை வீணாக்காமல் உண்ண கற்றுக் கொள்ளும்.


>12 YEARS
Fuse மாற்றல்சுவரில் ஆணிஅடித்தல்,வீட்டிலுள்ள வாகனத்தை பாதுகாக்கும் முறைகள்,பெட்ரோல் நிரப்பும் படிமுறைகள், Plumping வேலைகள் சொல்லி கொடுக்கலாம். 



  



No comments:

Post a Comment