Monday 20 April 2020

குழந்தைகளை சலிப்புத்தட்ட விடுவதனால் (Boredom) ஏற்படும் அற்புதமான நன்மைகள் 7


குழந்தைகள் தமக்கு ஒரு வேலையும் இல்லை, சலிப்பு தட்டுகின்றது, boring ஆக உள்ளது  எனக்கூறும் போது பெற்றோர்களாகிய நாம் ஒரு குற்ற உணர்வை உணர்கின்றோம். அவர்களின்  பொழுதை போக்குவதற்காக பல வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். Lock down காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. குழந்தை வளர்ப்பில் இது சரியான அணுகுமுறையா? என்றால், இது பிழையான செயற்பாடாகும்.

உண்மையில் குழந்தைகளுக்கு சலிப்புத்தட்ட அனுமதிக்க வேண்டும். குழந்தைகளை சலிப்புத்தட்ட விடுவதனால் (Boredom) ஏற்படும் அற்புதமான நன்மைகள் பின்வருவனவாகும். 

  • கற்பனை திறனை வளர்ப்பதோடு அவர்களது படைப்பாற்றலை வெளிக்கொணர வாய்ப்பளிக்கின்றது 


படைப்பாற்றல் திறனை குழந்தைகளுக்கு மேலோங்கச் செய்ய வேண்டுமாயின்  boredom அவசியம்.  இது குழந்தைகள் ஓய்வாக இருக்கும்போதே நடைபெறும்.


  • குழந்தைகள் தன்னை பற்றி ஆராய்வதற்கு நேரத்தை செலவழிக்க Boredom  வாய்ப்பளிக்கின்றது.

நான் யார் என்பதை புரிந்து கொள்வதற்கும்  தன்னுடைய மனது என்ன சொல்கின்றது என்பதனை ஆராய Boredom  வாய்ப்பளிக்கின்றது. 



  • கனவு காண தூண்டுகின்றது 

குழந்தைகள் கனவு காண்பது அவசியமான ஒன்றாகும். இன்று பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் யாரோ ஒருவர் தனது ஒய்வு நேரத்தில் கண்ட கனவுகளே ஆகும்.


  • மற்றவர்களின் உதவியின்றி தனிமையில் சந்தோசத்தை தேட கற்றுக்கொடுக்கின்றது 

Boredomயை அனுபவிக்கும் குழந்தைகள் சந்தோசமாக இருப்பதற்கு இன்னொருவர் தேவையில்லை என்ற கோட்பாட்டை புரிந்து கொள்கின்றனர். நான் என்னை விரும்புகின்றேன் என்னுடைய செயற்பாடுகளினால் நான் சந்தோசமாக உள்ளேன் என்ற நிலைக்கு மாறிவிடுகின்றனர்.


  • Boredom இல்லாமலாக்குவதற்கு  gadget வழங்குவது தீர்வல்ல

Gadget மேலும் மேலும் Reward centerயை  தூண்டிவிட்டு  Addiction  என்ற நிலைக்கு கொண்டுசெல்லும். 


  • வெற்றிப் பாதையில் முயற்சிக்க உதவும்.

எப்போதும்  ஏதோ ஒரு விடயத்தில் பிசியாக வைத்திருத்தல் என்பது ஆரோக்கியமான ஒன்றல்ல. இதன் போது அவர்கள் பிறரிடமிருந்து தொடர்ச்சியான தூண்டலை எதிர்பார்த்த வண்ணம் இருப்பர். இது அவர்களது சுய உற்சாகத்தை தடுத்து வெற்றிக்கான தடை கல்லாக மாறும். 

  • கெட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதை தடுக்கின்றது 

Boredomயினால் ஏற்படும் கஷ்டத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தல் அவசியமாகும். Boredom என்பதனை சிறுவயதில் அனுபவிக்காதவர்களே தமது குறுகிய ஆசைகளுக்காக பெரியவர்களாகும் போது கெட்ட பழக்கவழக்கங்களுக்கு (Substance abuse) அடிமையாகின்றனர்.




No comments:

Post a Comment